Tuticorin

News October 5, 2024

தூத்துக்குடி: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 04.10.2024 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 4, 2024

மாலத்தீவிற்கு தோணி போக்குவரத்து துவங்கியது

image

தூத்துக்குடியில் இருந்து இலங்கை மாலத்தீவு லட்சத்தீவுக்கு காய்கறிகள் கட்டுமான பொருட்கள் தோணி மூலம் ஏற்றுமதி செய்யப்படும். கடல் பருவநிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்த தோணி போக்குவரத்து நேற்று (அக்.3) முதல் மீண்டும் துவங்கியுள்ளது. மாலத்தீவிற்கு காய்கறிகள், மண், ஜல்லி கட்டுமான பொருட்களுடன் முதல் தோணி புறப்பட்டுச் சென்றது.

News October 4, 2024

டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து

image

விளாத்திகுளம் அருகே உள்ள மாவிலோடையிலிருந்து விளாத்திகுளத்திற்கு அரசு பேருந்து ஒன்று இன்று (அக்.4) சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து வில்வ மரத்துப்பட்டி வளைவு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்பக்க டயர் வெடித்து பேருந்து அருகில் இருந்த சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் இருந்த 30 பயணிகள் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர். இது பற்றி விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 4, 2024

சுப்பிரமணிய சிவாவின் பிறந்தநாள் இன்று

image

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீர முரசு என்று அழைக்கப்பட்டவர் சுப்பிரமணிய சிவா. கனல் பறக்கும் மேடைப்பேச்சு மற்றும் எழுச்சியூட்டும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் இவர். வஉசியின் சிறந்த நண்பர். 1908ஆம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள கோரல் மில் தொழிலாளர்கள் போராட்டத்தில் முன்னிலை வகித்து அந்த போராட்டத்தை வெற்றியடைய செய்தவர். தூத்துக்குடி தொழிலாளர்களால் நினைவு கூறப்பட வேண்டியவரின் பிறந்த தினம் இன்று.

News October 4, 2024

திருச்செந்தூர் கோவிலில் திருமணத்திற்கு சிறப்பு ஏற்பாடு

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.60 ஆயிரம் பயணத் திட்டத்தில் திருமணம் நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே ஏழை எளிய பொதுமக்கள் இந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்வதற்கு கோவில் நிர்வாகத்தில் தொடர்பு கொள்ளலாம் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் இன்று(அக்.03) தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 4, 2024

விவசாய நிலம் வாங்க வங்கி மூலம் கடன்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தாட்கோ மூலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் விவசாயம் நிலம் வாங்க விவசாயிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் மானிய தொகையுடன் குறைந்த வட்டியில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 4, 2024

புகைப்பட போட்டி கால அவகாசம் நீடிப்பு

image

தூத்துக்குடியில் இன்று துவங்கி நடைபெற்று வரும் ஐந்தாவது புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை விழாவை முன்னிட்டு புகைப்பட போட்டி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. புகைப்படங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி இன்றுடன் (3) நிறைவு பெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இதற்காக கால அவகாசத்தை ஐந்தாம் தேதி வரை நீடித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

News October 3, 2024

இரவு ரோந்து பாதுகாப்பு காவலர்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News October 3, 2024

சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்

image

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 8ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், திருச்சி, மதுரை, மணியாச்சி வழியாக தூத்துக்குடி வந்தடையும். மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து 9ஆம் தேதி காலை 9.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

News October 3, 2024

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அலுவலகம் மற்றும் தொழில்நெறி மையம் ஆகியவை இணைந்து அக்.5 அன்று தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 100 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் நிலையில் சுமார் 5000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!