India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விளாத்திகுளம் க.சுப்பிரமணியபுரம் தெற்கு தெரு பகுதியைச்சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் பிரசாத் (24), இவருக்கு வாகன விபத்தின் காரணமாக காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரசாத் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார், இதனால் வலி தாங்க முடியாமல் மனவேதனையில் இருந்த பிரசாத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், விளாத்திகுளம் போலீசார் விசாரணை.

தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில்களின் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் அமலில் வந்துள்ள இந்த அட்டவணையில், வாஞ்சி மணியாச்சி, மைசூரு, திருநெல்வேலி, சென்னை, பாலக்காடு, மேட்டுப்பாளையம், ஒகா உள்ளிட்ட முக்கிய வழித்தட ரயில்களின் புறப்படும் நேரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். SHARE

தட்டார்மடம் அருகேயுள்ள கடக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (53). இவர் நேற்று புத்தன் தருவை ரோட்டில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலின் பேரில் தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் விசாரணை.

தூத்துக்குடி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன் மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க

எப்போதும் வென்றான் அருகே உள்ள கீழச்செய்த்தலை கிராமம் கீழத்தெருவைச் சேர்ந்வர் மகாராஜா (24). இவர் இன்று அதிகாலை தனது வீட்டில் மோட்டார் சுவிட்சை போடும்போது, மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பலர் திருச்செந்தூருக்கு வந்து செல்கின்றனர். இன்று அதிகாலை சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வேன் ஒன்று திருச்செந்தூர் நோக்கி வந்தது. திருச்செந்தூர் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 13 ஐயப்ப பக்தர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திருச்செந்தூர் G.H-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் <

விளாத்திகுளத்தில் க.சென்றாயபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் அப்பனசாமி (37) சிலம்பம் கற்றுக் கொடுத்து வந்துள்ளார். அங்கு, 15 வயது சிறுமிக்கு இவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் அப்பனசாமியை (37) விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உடன்குடி பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து (57). இவரது கடைசி மகன் சுந்தர் (25). கட்டிடத்தொழிலாளியான சுந்தருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் சுந்தர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது அவரை தாய் சாவித்திரி கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையில் சுந்தர் தனது அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குலசை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.