Tuticorin

News October 9, 2024

அதிக அளவில் வண்டல் மண் ஆட்சியர் அறிவுறுத்தல்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் 875 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க 2299 விவசாயிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். நீர்நிலைகளில் அதிக அளவில் வண்டல் மற்றும் கரம்பை மணி எடுத்தால் மட்டுமே குளங்களில் ஆழம் அதிகமாகி மழை நீரை தேக்க முடியும் எனவே விவசாயிகள் அதிக அளவில் வண்டல் மண் எடுக்க அறிவுறுத்தப் படி அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 9, 2024

இம்மானுவேல் சேகரனுக்கு அமைச்சர் வாழ்த்துரை

image

ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலையிலுள்ள மக்களின் உரிமைகளுக்காக போராடிய சுதந்திர போராட்டத்தின் வீரர், தியாகி இமானுவேல் சேகரன் பிறந்த நாள் விழா இன்று தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் இமானுவேல் சேகரன் புகழைப் போற்றுவோம் என்று தனது வலைதளத்தில் இன்று பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

News October 9, 2024

புத்தகத் திருவிழாவில் இன்று பேச்சாளர்களின் உரை நிகழ்ச்சி

image

தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோட்டில் அமைந்துள்ள சங்கரப்பேரியின் சாலை பிரிவு பகுதியருகே, தற்போது புத்தக திருவிழா நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், இன்று (அக்.09) சிறப்பு பேச்சாளர்களாக எழுத்தாளர் நெல்லை கவிநேசன் மற்றும் நல்லாசிரியர் சிவகளை மாணிக்கம் ஆகியோர் மாலை 6 மணிக்கு உரையாற்ற உள்ளனர். அனைவருக்கும் அனுமதி இலவசம் என்று மாவட்ட நிர்வாக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 9, 2024

இம்மானுவேல் சேகரனார் எம் பி புகழாரம்

image

தூத்துக்குடியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று(அக்.09) தனது முகநூல் பக்கத்தில், தியாகி இமானுவேல் சேகரன் பிறந்தநாளை ஒட்டி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காவே தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்த தீரர், சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனின் பிறந்த நாளில் அவர் கண்ட சமத்துவ சமூகம் என்ற கனவை நிறைவேற்ற உறுதியேற்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

News October 9, 2024

வேம்பு நடவு செய்தால் ரூ.17,000 மானியம்

image

தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வரோக நிவாரணி என்று அழைக்கப்படும் வேம்பினை விவசாயிகள் புதிதாக நடவு செய்தால் தேசிய உணவு என்னை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு 400 மரக்கன்றுகள் என்ற அளவில் ரூ.17,000 மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News October 9, 2024

தூத்துக்குடியில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பாக சீரிளமை திறம் கொண்ட அன்னை தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News October 9, 2024

இரவு நேர காவல்துறையினரின் தொலைபேசி எண்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 8, 2024

முதியோர் இல்லங்கள் ஆன்லைன் பதிவு கட்டாயம்

image

“தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் முதியோர் இல்லங்கள் www://seniorcitizenhomes.in.socialwelfare.tn.govt.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்கள் சான்றிதழ்களையும் இணைத்து விண்ணப்பித்து பதிவு சான்று பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு சான்று பெறாத முதியோர் இல்லங்கள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது” என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News October 8, 2024

இரவு நேர காவல்துறையினரின் தொலைபேசி எண்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 7, 2024

தசரா திருவிழாவை முன்னிட்டு 24 மணி நேரம் கண்காணிப்பு

image

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 32 நிரந்தர கண்காணிப்பு கேமராக்களும் 120 தற்காலிக கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளd. மேலும் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் 24 மணி நேரமும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!