India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நேற்று(அக்.27) வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி தபால் நிலையத்தில் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட வெளிநாடுகள் அஞ்சலக ஏற்றுமதி மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்ப விரும்புபவர்கள் தங்கள் பார்சலின் விவரங்களை தாங்களே எளிமையான முறையில் ஆன்லைனில் உள்ளீடு செய்து பின் தபால் நிலையம் மூலம் அனுப்பலாம் என்றார்.
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் சார்பில், சிறப்பாக தொண்டு புரிந்த பெண்களுக்கு “முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விருது” வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அப்துல் கலாமின் பேரன் சேக் சலீம் கலந்து கொண்டு சிறப்பாக சேவையாற்றிய பெண்களுக்கு விருதுகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (அக்27) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி வழங்கப்படும். பொதுவாக 15 கிலோ புழுங்கல் அரிசி 5 கிலோ பச்சரிசியும் அனைவரும் வாங்குவது வழக்கம். ஆனால் தற்போது தீபாவளி பண்டிகை நேரம் என்பதால் பலகாரங்கள் செய்வதற்காக 10 கிலோ பச்சரிசி வாங்குகின்றனர். இதனால் பச்சரிசி விநியோகம் அதிகரித்துள்ளது.
தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளி கடைகளில் அதிக அளவில் மக்கள் கூடுவதால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நான்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன் முக்கிய இடங்களில் அதிக அளவில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.சிசிடிவி கேமரா பொருத்திய ரோந்து வாகனம் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் வடகிழக்கு பருவ மழையை கருத்தில் கொண்டு பேரிடர் கால பாதிப்பை மக்கள் உடனுக்குடன் தெரிவித்து அதனை சரி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18002030401 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர், அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் 4,857 மெட்ரிக் யூரியா கையிருப்பு உள்ளது. மேலும் 2569 டன் காம்ப்ளக்ஸ் 3065 மெட்ரிக் டன் டிஏபி 471 மெட்ரிக் டன் டிஏபி, 471 மெட்ரிக் டன் பொட்டாஸ் கையிருப்பு உள்ளதாகவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மழை வெள்ள காலங்களில் முன்கூட்டியே மழை வெள்ள நிலவரங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பாதுகாப்பாக இருக்க டிஎன் அலார்ட் என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் நான்கு நாட்கள் அடுத்தடுத்து வானிலை அறிவிப்பை தெரிந்து கொள்வதுடன் மழை வெள்ள பாதிப்பு குறித்த புகார்களையும் தெரிவிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் இன்று தெரிவித்துள்ளார்.
தென்மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் இன்று(அக்.26) தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு விற்பனை நடைபெற்றது. தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனை செய்யவும் வாங்கிச் செல்லவும் வந்திருந்தனர். இதுவரை ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.