Tuticorin

News October 30, 2024

தேவர் பிறந்த நாள் கனிமொழி எம்பி வாழ்த்து

image

முத்துராமலிங்கர் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது முகநூல் பக்கத்தில், “ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போரில் முன்னின்றவர்; வேற்றுமைகள் அற்ற சமத்துவ சமுதாயம் உருவாகப் பாடுபட்டவருமான பசும்பொன் பெருமகனாரின் பிறந்தநாளில், அவரின் அரும்பணிகளை போற்றிடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News October 30, 2024

சிறப்பாக பணியாற்றிய 69 காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

image

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக்.03ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெற்றது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் மற்றும் ஊர் காவல் படை காவலர்கள் 69 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

News October 30, 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் 14.65 லட்சம் வாக்காளர்கள்

image

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நேற்று வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சத்து 65 ஆயிரத்து 127 வாக்காளர்கள் உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்தார்.

News October 29, 2024

தீபாவளி விமான கட்டணம் அதிரடி உயர்வு

image

தீபாவளி பண்டிகை ஒட்டி நான்கு நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ரயில் மற்றும் பேருந்துகளில் ஏற்கனவே முன்பதிவுகள் முடிந்து விட்டன. இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானத்திற்கான கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களில் சென்னைக்கு 4,010 ரூபாய் கட்டணம் இருந்த நிலையில் தற்போது 8,976 முதல் 13,317 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

News October 29, 2024

தீபாவளி: தூத்துக்குடி – தாம்பரம் சிறப்பு ரயில்

image

தீபாவளியை முன்னிட்டு தூத்துக்குடியிலிருந்து தாம்பரத்திற்கு இன்று & நவம்பர் 4 சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு காலை 10:20க்கு தாம்பரம் சென்றடையும். அதேபோல் தாம்பரத்திலிருந்து 30ஆம் தேதியும் நவம்பர் 5ம் தேதியும் தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்திலிருந்து பகல் 12:20க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 29, 2024

தீபாவளி பலகாரங்கள்; ஆட்சியர் எச்சரிக்கை

image

தீபாவளி பண்டிகையொட்டி இனிப்பு காரவகை பலகாரங்கள் தயாரிப்பாளர்களும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். சுகாதாரமான பாதுகாப்பான உணவுகளையே நுகர்வோருக்கு விற்பனை செய்ய வேண்டும். உணவுப் பொருட்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News October 29, 2024

இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வைத்து இன்று(அக்.29) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி காலை 9.45 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

News October 28, 2024

காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் பேரவை கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் பேரவை கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காவல்துறையினருக்கு பங்கு ஈவுத்தொகை வழங்கினார். உடன் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

News October 28, 2024

தூத்துக்குடியில் போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

image

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் தங்கமணி நகரை சேர்ந்தவர் அரவிந்த் (25). கடந்த 2021 ஆம் ஆண்டு இவர் தாளமுத்து நகரைச் சேர்ந்த 17 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக இவரை தாளமுத்து நகர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் அரவிந்துக்கு இன்று 20 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News October 28, 2024

லாரி மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலி

image

எட்டையாபுரம் அருகே உள்ள வால்பட்டியை சேர்ந்தவர் அர்ஜுன்(39). இவர் நேற்று(அக்.27) எட்டையாப்பூரத்திலிருந்து எப்போதும்வென்றானுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரி ஒன்று பிரேக் பிடிக்கவே இவரது இரு சக்கர வாகனம் லாரி மீது மோதியது. இதில் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து எப்போதும்வென்றான் போலீசார் விசாரிக்கின்றனர். 

error: Content is protected !!