India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள் & கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இன்ற(நவ.7) மாலை 5.45 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தூத்துக்குடியில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழில் பேசவும், எழுதவும் வேண்டும். *SHARE
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அசம்பாவிதங்கள் மற்றும் குற்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“தூத்துக்குடிக்கு முதல்முறையாக வரவுள்ள துணை முதல்வர் உதயநிதிக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்கவும் திமுக இளைஞரணியில் உறுப்பினர்களை சேர்ப்பது சம்பந்தமாகவும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் வரும் 9 ம்தேதி தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது” என தெரிவித்துள்ளார்
தூத்துக்குடியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள், கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை (நவ.7) மாலை 5.45 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தூத்துக்குடியில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழில் பேசவும், எழுதவும் வேண்டும். *ஷேர்*SHARE
திருச்செந்தூரில் நாளை (நவ.7) நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். சென்னைக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது. இந்த ரயில் திருச்செந்தூரில் இருந்து நாளை (நவ.7) இரவு 10:10க்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு அடுத்த நாள் காலை (நவ.8) காலை 10:30 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான குறை தீர்ப்பு நாள் கூட்டம் வரும் 8ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது, இதில் பணியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை (நவ.7) சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வழியாக செல்லும் சரக்கு கனரக வாகன போக்குவரத்திற்கு இன்றும் நாளையும் தடை செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அசம்பாவிதச் சம்பவங்கள் மற்றும் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழு 2024-2025 ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பிட்டு குழு தலைவர் காந்தி ராஜன் தலைமையில் (நவ 05) நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு நடைபெற்று வரும்பணிகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
மூனாரை சேர்ந்த கணவன் மனைவி மேரி, தேவ சிங் இவர்கள் குலசேகரப்பட்டினத்தில் பேப்பர் சேகரிக்கும் தொழில் செய்து வந்தனர். கடந்த 2013 ஆம் ஆண்டு பிள்ளையான் பெரியவன் தட்டை சேர்ந்த செல்வம் என்பவர் மேரியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற போது தகராறு ஏற்படவே செல்வம் மேரியையும் தேவசிங்கையும் வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கில் செல்வத்திற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Sorry, no posts matched your criteria.