India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (நவ09) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட சமையல் எரிவாயு நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் வரும் 21ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை நடைபெற உள்ளது. இதில் சமையல் எரிவாயு பயன்படுத்துபவர்கள் எரிவாயு சிலிண்டர் வருவதில் தாமதம், புதிய சிலிண்டர் பதிவு செய்வது, டெபாசிட் திரும்ப பெறுவது போன்ற குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
செக்காரக்குடியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (41) இவர் மத்திய பிரதேசத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2ம் தேதி விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார். இது பற்றி தட்டப்பாறை போலீசார் விசாரணை நடத்தினர்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா வெகு சிறப்பாகவும் அமைதியாகவும் நடந்து முடிந்துள்ளது. இதில் சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்ட காவல்துறையினருக்கும் இதற்கு ஒத்துழைப்பு அளித்த பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்வதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை நேற்று(நவ.08) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு வார விழா வினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் மற்றும் கட்டுரை போட்டி வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் இந்த போட்டிகள் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் வைத்து நடைபெறும் என்றும் தூத்துக்குடி மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜா நேற்று தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் அரசுத் துறையினர் மக்கள் இருக்கும் இடங்களுக்கு நேரடியாக மனுக்களை பெறும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற நிகழ்ச்சி வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது, இதற்கான முன்னோடி மனுநீதி நாள் கோவில்பட்டி வட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் அலுவலர் அலுவலகங்களில் இன்று(நவ.09) காலை 10 மணிக்கு மேல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தற்போது மழைக்காலம் துவங்கி விட்டதால் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை சாலைகளில் கவனமாகவும் அதிக வேகம் இல்லாமல் ஓட்ட வேண்டும்; மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, ஒருவரை ஒருவர் முந்தி செல்வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்” என எச்சரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (நவ08) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதந்தோறும் பொது விநியோகத் திட்ட குறைகளை களைய சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (9.11.2024) காலை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மேலும் புதிய குடும்ப அட்டைக்கு பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி மாரியப்பன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய உணவு பாதுகாப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இனி தெருவில் நடந்து சென்றோ தள்ளுவண்டியில் சென்றோ விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு பதிவு கட்டணம் ரூ.100 ரத்து செய்யப்படுகிறது. ஆனால் அவர்கள் கட்டணம் ஏதும் செலுத்தாமல் பதிவு சான்றிதழ் பெற்று நகல் வைத்திருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.