Tuticorin

News November 15, 2024

திருச்செந்தூர் கோயிலுக்கு புதிய கண்காணிப்பாளர்கள் நியமனம்

image

தூத்துக்குடி அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலக மேலாளர் ரோகிணி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அயற்பணி கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல் தூத்துக்குடி உதவி ஆணையர் அலுவலக தலைமை எழுத்தர் மாரியம்மாள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அயற்பணி கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News November 15, 2024

தூத்துக்குடி: புதிய வாக்காளர்களுக்கு நாளை வாய்ப்பு!

image

தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்ய முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(நவ.,16) & நாளை மறுநாள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் புதிய வாக்காளர்கள் பதிவு செய்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE IT.

News November 15, 2024

பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்க கோரிக்கை

image

விளாத்திகுளம் கரிசல் பூமி விவசாய சங்க தலைவர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் ராபி பருவ சாகுபடியாக உளுந்து, பாசி பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய இன்று(நவ.,15) கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் 50% பேர் இன்னும் பயிர்க் காப்பீடு செய்யாமல் உள்ளனர் எனவே பயிர்க் காப்பீடு செய்வதற்கான தேதியை இம்மாதம் முப்பதாம் தேதி வரை நீட்டிக்க கோரிக்கை வைத்துள்ளார்.

News November 15, 2024

தூத்துக்குடியில் 500 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள்

image

தூத்துக்குடி குறிஞ்சி நகரில் நேற்று(நவ.,14) இரவு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுகவின் பவள விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் கலந்துகொண்டு 500 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News November 15, 2024

தூத்துக்குடி இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (நவ14) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில்குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.

News November 14, 2024

தூத்துக்குடியில் குழந்தைகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்

image

தூத்துக்குடி அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டமும் ஆண் குழந்தைகளுக்கு செல்வமகன் சேமிப்பு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதற்கான சிறப்பு முகாம் இம்மாதம் 30ஆம் தேதி வரை தூத்துக்குடி தபால் நிலையங்களில் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

News November 14, 2024

தூத்துக்குடி போலீஸ் சார்பில் பொதுமக்களுக்கு அறிவுரை

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று பொது மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,“இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்; இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்; மேலும் வாகனத்தில் பயணம் செய்ய இருவரும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 14, 2024

தூத்துக்குடி: செல்பி எடுத்து பதிவிட்டால் சான்றிதழ்!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை முகாம் நவ.,16 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த முகாம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த இளம் வாக்காளர்கள் முகாமிற்கு செல்லும்போது, வாக்குச் சாவடி நிலை அலுவலருடன் தனித்துவமான செல்பி எடுத்து அதனை மாவட்ட தேர்தல் அலுவலரின் இணையதளத்தில் பதிவிட்டால் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2024

ஆக்கிரமிப்பு இடங்களில் விளையாட்டு திடல்: மேயர் ஜெகன்

image

தூத்துக்குடியில் நேற்று(நவ.,13) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், தூத்துக்குடியில் 40 இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவைகளை மீட்டு அந்த இடங்களில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கபடி, கிரிக்கெட், கைப்பந்து போன்ற விளையாட்டு திடல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News November 14, 2024

தூத்துக்குடி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (நவ.13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!