India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 135ன் படி இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தொழிலாளர் துறை அறிவுரைகளின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாள் அன்று தேர்தல் பணியில் ஈடுபட உள்ள தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த காவல்துறையினர் 745 பேர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றும் நாளையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று ஏராளமான காவல் துறையினர் தங்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி தூத்துக்குடியில், திருச்செந்தூர் AWS பகுதியில் 2 சென்டி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தச்சமொழி பகுதியில் உள்ள தோட்டத்தில் அதிக அளவில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அங்கு சென்ற காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் அங்கு நடத்திய சோதனையில் 1145 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் செல்வகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அடுத்த 3 மணி நேரத்திற்கு தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அதிகபட்சமாக 2 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இந்தியா கூட்டணி வேட்பாளர் கனிமொழி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடம் தங்களின் பல்வேறு நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளதாகவும், வரும் காலத்தில் மக்களின் மீதமுள்ள குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் என அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் தேதி தீயணைப்பு, மீட்பு பணியின் போது உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில தீயணைப்பு படையினரால் தீ தொண்டு நாள் நீத்தார் நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி தீயணைப்பு படை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோ பிரசாத் தீயணைப்பு படை வீரர்கள் நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் இன்று மாலை 7 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேல ஈரால் கிராமத்தில் சித்திரைமாத பிறப்பை முன்னிட்டு பொன்னேர் திருவிழா இன்று நடந்தது. இதில் விவசாயிகள் தங்களது டிராக்டரை கொண்டு விவசாய நிலங்களில் இந்த வருடத்தில் முதல் முறையாக உழுவது வழக்கம். இதில் மேல ஈரால் கிராமத்தை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது டிராக்டரை கொண்டு விவசாய பணியை துவக்கினர்.
Sorry, no posts matched your criteria.