India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சுழி DSP-ஆக இருந்த ஜெயநாதன் கோவில்பட்டி DSP-க்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் வள்ளியூர் DSP யோகேஷ் குமார் திருச்செந்தூர் DSP-ஆக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்செந்தூர் DSP வசந்த ராஜ் கொங்கு நகர காவல் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி குற்ற ஆவண காப்பக DSP பொன்ராமு விருதுநகர் மாவட்டம் திருச்சுழிக்கு மாற்றப்பட்டுள்ளார். கோவில்பட்டி DSP வெங்கடேஷ் வள்ளியூருக்கு மாற்றம்.
தூத்துக்குடி கியூ பிராஞ்ச் போலீசார் இன்று(நவ.,20) அதிகாலை குலசேகரப்பட்டினம் வடக்கூர் கடற்கரையில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை மறித்து சோதனை செய்ததில், இலங்கைக்கு கடத்துவதற்காக 44 பண்டல்களில் 1500 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வேன் டிரைவரானை திருச்சியை சேர்ந்த பிரகாஷையும் கைது செய்தனர்.
தூத்துக்குடி உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். SHARE IT.
தூத்துக்குடி மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலையும் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதை தொடர்ந்து, மாணவர்களின் நலன் கருதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,20) விடுமுறை அளித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசு நிர்வாகம் பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை களையும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் இந்த நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (நவ.20) கோவில்பட்டி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் மாவட்டங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (நவ.19) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது
திருச்செந்தூர் முருகன் கோவில் யானை தெய்வானை நேற்று யானைப்பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினரை திடீரென தாக்கியதில் பலியாகினர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூர் வந்திருந்த நடிகர் சிவகார்த்திகேயன் யானை தெய்வானை உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை (நவ.20) காலை குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு நீண்ட காலமாக கிடப்பில் உள்ள மனுக்கள் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஆண்டு முழுவதும் பல லட்சம் டன் சரக்குகள் கையாளப்படுகின்றன. துறைமுகத்தில் உள்ள நான்காவது சரக்கு தளத்தில் 29,212 டன் நிலக்கரி கையாண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு 25,900 நிலக்கரி கையாண்ட சாதனை முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(நவ.,19) காலை 7 மணி வரை பெய்த மழை அளவு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக குலசேகரப்பட்டினத்தில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. திருச்செந்தூர் 15, காயல்பட்டினம் 13, கயத்தாறு 10 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஓட்டப்பிடாரம் 4.50m சாத்தான்குளம் 3.40, மில்லி மீட்டர் கடம்பூர் வைப்பார் தலா 3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
Sorry, no posts matched your criteria.