Tuticorin

News November 23, 2024

5,070 மெட்ரிக் டன் யூரியா கையிருப்பு: தூத்துக்குடி கலெக்டர்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் விவசாயிகள் நலன் கருதி 5,070 மெட்ரிக் டன் யூரியா, 2,420 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 2,448 மெட்ரிக் டன் டிஏபி, 872 மெட்ரிக் டன் பொட்டாஸ் கையிருப்பில் உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News November 22, 2024

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-யின் முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,“தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு நாள் கூட்டம் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு பிரிவு ஒன்று துவக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

News November 22, 2024

பருவ மழை முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் இன்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பருவ மழை முன்னெச்சரிக்கை சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

News November 22, 2024

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் அறிவிப்பு

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2025 சிறப்பு முகாம்கள் கடந்த வாரம்(நவ.16,17) நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட சிறப்பு முகாம்கள் நாளை & நாளை மறுநாள்(நவ.,23,24) நடைபெறவுள்ளன. எனவே இவ்வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழை திருத்தம், முகவரி மாற்றம் செய்யுமாறு தூத்துக்குடி கலெக்டர் இளம் பகவத் கேட்டுக்கொண்டுள்ளார். SHARE IT.

News November 22, 2024

தூத்துக்குடி ஆட்சியரகத்தில் ஆலோசனை கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நேற்று மருத்துவம் மக்கள் நலத்துறை மற்றும் குடும்ப நலத்துறை ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சிவகுமார் கலந்து கொண்டார். கூட்டத்தில் மருத்துவத் துறை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

News November 21, 2024

ஸ்ரீவை., எம்.எல்.ஏ-வுக்கு புது பொறுப்பு

image

கிராமங்கள் அளவில் காங்கிரஸ் கட்சியை மறு சீரமைக்க தமிழ்நாடு காங்கிரஸ் தூத்துக்குடி தெற்கு, வடக்கு மற்றும் மாநகர் மாவட்ட பகுதிகளுக்கு கிராம சீரமைப்பு கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மாநில பொதுச் செயலாளர் பால்ராஜ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News November 21, 2024

தூத்துக்குடி கலெக்டரின் எச்சரிக்கை அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி கல்லூரிகள், கடைகள், ஐ.டி நிறுவனங்கள் போன்றவற்றில் பெண்கள் பணிபுரியும் இடங்களில் புகார் குழு அமைக்க வேண்டும். அவ்வாறு புகார் குழு அமைக்காத நிறுவனங்கள் கண்டறியப்பட்டால் அவைகளுக்கு ரூபாய் 50,000 அபராதம் விதிக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 21, 2024

தூத்துக்குடியில் 23 டி.பீ.டி.ஓ பணியிடமாற்றம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் பணிபுரியும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 23 பேர் பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் ஆணை பிறப்பித்துள்ளார். ஊராட்சி ஒன்றியங்களில் பொது பிரிவு, கணக்குகள் பிரிவு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள், தணிக்கை, சத்துணவு என பல்வேறு பிரிவுகளில் இவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News November 21, 2024

தூத்துக்குடி விசை படகு மீனவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

image

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உலக மீனவர் தின விழா நடைபெற்றது. தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகையில், “தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை ஏற்றுமதிக்கு தகுதியான துறைமுகமாக மாற்றும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இனிகோ நகர் பகுதியில் மீன் ஏலக்கூடம் மற்றும் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

News November 21, 2024

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்

image

நெல்லை, குமரி, தூத்துக்குடி உட்பட 5 மாவட்டங்களில் இன்று(நவ.,21) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆதலால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. SHARE IT.

error: Content is protected !!