India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள ஆண்டி விளை ஸ்ரீ நாக முத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி கொடை விழா துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது, இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு வழிபாடு நடத்தினர். பூஜைகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இன்று வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதனை ஒட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு முதலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் புனித நீரால் கோபுர கலசங்களுக்கு அபிஷேகமும் , சங்காபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கோடை வெயிலின் தாக்கம் இருப்பதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருப்பதோடு நண்பகல் வேளையில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் கோடை வெயிலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தனியாக படுக்கை ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒஎஸ்ஆர் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரை சேர்ந்தவர் சுடலைமுத்து (ஆட்டோ டிரைவர்). இவருக்கும் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார் மடத்தைச் சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்த சுகன்யாவின் உறவினர்கள் வினித் ராஜ் , பரத் ஆகியோர் நேற்று முன்தினம் சுடலைமுத்து சுகன்யாவையும் அறிவாளால் வெட்டியுள்ளனர். இது பற்றி தட்டார்மடம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக மாநில தேர்தல் ஆணையராக இருப்பவர் ஜோதி நிர்மலா சாமி. இவர் இன்று மாநில தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக தூத்துக்குடி வருகை தந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலா சாமியை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அரசு அதிகாரிகளும் அவரை வரவேற்றனர்.
கோவில்பட்டியில் தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் இருந்து தினசரி இளநீர் கோவில்பட்டிக்கு வரத்து உள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இளநீர் விற்பனை சூடு பிடித்துள்ளது. இன்று காலை 7மணிக்கு வந்த இளநீர் 9மணிக்குள் விற்று முடிந்தது. ஒரு இளநீர் ரூ.25 முதல் ரூ.35 வரை விற்கப்படுகிறது. இளநீர் வண்டியில் இருந்து இறங்கும்போதே மக்கள் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள ஆர் சண்முகபுரத்தை சேர்ந்தவர் ரவுடி மாரியப்பன். நேற்று மாலை ஜாகிர் உசேன் நகரில் ஒரு முட்புதரில் நண்பர்களுடன் அமர்ந்து கஞ்சா அடித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் இவரை அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள ஆர் சண்முகபுரத்தை சேர்ந்தவர் ரவுடி மாரியப்பன். நேற்று மாலை ஜாகிர் உசேன் நகரில் ஒரு முட்புதரில் நண்பர்களுடன் அமர்ந்து கஞ்சா அடித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் இவரை அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிர் செய்து இருந்தனர். தற்போது மக்காச்சோளம் அறுவடை நடைபெற்று வருகிறது. இருப்பினும் மக்காச்சோளத்தை வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதால் அரசே ஒழுங்குமுறை விற்பனை கூட மூலம் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 1624 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 9 லட்சத்து 75 ஆயிரத்து 468 வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் 66.88% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.