India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் சிறந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு 12ஆம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர்.தூத்துக்குடியில் மே.11 இல் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே பட்டாண்டிவிளை, காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் மனைவி பேச்சியம்மாள் (18). இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பேச்சியம்மாள் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து டிஎஸ்பி மாயவன் தலைமையிலான சாயர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாயர்புரம் பட்டாண்டி விளையைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பேச்சியம்மாள் என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். பேச்சியம்மாள் அடிக்கடி செல்போனில் பேசுவதை ஸ்ரீராம் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பேச்சியம்மாள் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி அறிவியல் மன்றம் சார்பில் பள்ளி மாணவர்களின் ஓவிய திறமையை வளர்க்கும் வகையில் நாளை (மே.8) முதல் மே.10 ஆம்தேதி வரை இணைய வழி ஓவிய போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா லட்சுமிபதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் என்ன படிக்கலாம், கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி என்பது பற்றி விளக்குவதற்காக கல்லூரி கனவு என்ற வழிகாட்டு நிகழ்ச்சி மே.11 இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் நடைபெற உள்ளதாகவும் இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற கேட்டுக் கொண்டுள்ளார்.
சாத்தான்குளம் – வள்ளியூர் பிரதான சாலையில் நேற்று திருமண நிகழ்ச்சிக்காக செண்டா மேள குழுவினர் சென்ற டாடா சுமோ கார் மற்றொரு சொகுசு கார் மீது மோதியது. இதில் 2 பேர் காயமடைந்து நிலையில் அவர்கள் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகருக்கு வல்லநாடு ஆற்று படுகையில் இருந்து தூத்துக்குடி ராஜாஜி பூங்கா நீரேற்று நிலையத்திற்கு நீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு இந்த நீரேற்று நிலையத்தை மாநகராட்சி மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் சீரான முறையில் குடிநீர் வழங்கவும், குடிநீர் விநியோகத்தில் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்திடவும் அறிவுரைகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 17,908 மாணவர்கள் +2 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தம் 96.39% ஆகும். மேலும் மாவட்டத்தில் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, காமநாயக்கன்பட்டி, ராமானுஜம், புதூர், திருச்செந்தூர் ஆகிய 13 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜ கணபதி நகரை சேர்ந்தவர் நாகேந்திரன் லாரி டிரைவர். இவரது மனைவி ரெஜினா மேரி. ரெஜினா மேரியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த நாகேந்திரன் இன்று காலை அவரை அரிவாளால் வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த ரெஜினா மேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவியை கொலை செய்த நாகேந்திரன் முத்தையாபுரம் போலீசில் சரணடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பிரகாசபுரத்தைச் சேர்ந்த மனோவா (28). இவர் தனியார் வங்கியில் சுய உதவிக்குழு கடனை வசூல் செய்யும் பணி செய்து வருகிறார். இவர் நேற்று நெய்விளை அருகே பைக்கில் சென்றபோது 3 பேர் அவரை கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 5 கிராம் தங்கச் செயின் மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் மூவரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.