India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மகிழ்ச்சி புரத்தை சேர்ந்தவர் வள்ளி (50), கணவனை இழந்த இவர் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நேற்று பகல் சில்வர்புரம் சாலை அருகே பினாயிலையும் ஆசிட்டையும் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சிப்காட் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் வல்லநாடு பகுதிகளில் அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் நாளை (07-12-2024) பல்வேறு நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில், இதுகுறித்த நிகழ்ச்சி விபர பட்டியலை இன்று (டிச.6) தூத்துக்குடி திமுக கழக அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (டிச06) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.
தூத்துக்குடி கே.டி.சி நகரைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் டிரேடிங் மூலம் பணம் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்ற தகவலை எடுத்து அவர் fht என்ற செயலியை நிறுவி அதன் மூலம் ரூபாய் 52,11,132 முதலீடு செய்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டது அறிந்து தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசில் செய்ததன் பேரில் போலீசார் விசாரணை செய்து கேரளா மலப்புரத்தைச் சேர்ந்த அஜமல் என்பவரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், ஊரக வளர்ச்சி உதவி ஆட்சியர் ஐஸ்வர்யா உள்பட கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி கணேசன் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக சிபிஎம் சார்பில் மாநகராட்சியில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் குடிநீரில் கழிவுநீர் கலப்பது சரி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் குடிநீருடன் கழிவுநீர் கலந்ததாக கூறப்படுகின்றது. இதற்கு சிபிஎம் நகரச் செயலாளர் முத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஆட்சி மொழி சட்டம் கடந்த 1956 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதனை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வரும் 18 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் ‘தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம்’ கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு மாதவன் குருச்சியில் சுமார் 1500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆதியாகுறிச்சி பஞ்சாயத்தில் 1,000 ஏக்கர் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே ஏவுதள பணிக்கு எத்தனை ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்பதை தெரிவிக்க விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி, ஆழ்வார் திருநகரி, தென்திருப்பேரை வேளாண் விரிவாக்க மைய அலுவலகம் கிடங்குகளை பார்வையிட்டு திரவ உயிர் உரங்களை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கினார். நெல் சாகுபடி பணிகளை பணிகளை, வேளாண் உதவி இயக்குநர் சுரேஷ் உடன் சென்று ஆய்வு செய்து தேவையான அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் மாவட்டங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.