India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி வாகைகுளம் மதர் தெரேசா பொறியியல் கல்லூரி மாணவருக்கு பன்னாட்டு நிறுவனத்தில் ரூ.10 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. கல்லூரியில் இந்த ஆண்டு 100 சதவீத வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் கணினி துறையில் இறுதியாண்டு பயிலும் ஜெரூஸ் என்ற மாணவருக்கு பன்னாட்டு நிறுவனத்தில் ஆண்டுக்கு 10.2 லட்சம் வருமானத்தில் வேலை கிடைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்றங்களுக்கு கஞ்சா மற்றும் மது போதை தான் காரணம் என தனியார் பத்திரிகை ஒன்றில் செய்தியாக வெளிவந்துள்ளது. இந்த செய்தி வெளியான தகவலானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தனது மறுப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சிங்கப்பூர் மலேசியா வெளிநாடுகளில் வாழும் முன்னாள் மாணவர்கள் உட்பட 200 பேர் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் குழு புகைப்படமும் எடுத்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் இறந்து கிடப்பதாக புதுக்கோட்டை போலீஸ்சாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி இறந்தவர் யார் எந்த வாகனம் மோதி பலியானார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டப்பிடாரத்தை சேர்ந்தவர் முத்துகுமார் (41). இவர் அரசு கேபிள் டிவி ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் இன்று காலை முத்துகுமார் தோட்டப் பணிகளை மேற்கொண்டு வந்தார். அப்போது தோட்டத்தில் அறுந்து கிடந்த உயரழுத்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக முத்துகுமாா் மிதித்துள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி அண்ணா நகரில் நேற்று நள்ளிரவில் செந்தில் ஆறுமுகம் என்ற வழக்கறிஞர் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சொத்து தகராறில் செந்தில் ஆறுமுகத்தை வெட்டி கொலை செய்ததாக அவரது தங்கை கணவர் கோபிநாத் உட்பட ஆறு பேரை போலீசார் சற்று முன் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டப்பிடாரம் புதுப்பச்சேரியை சேர்ந்தவர் முத்துக்குமார் (28). அரசு கேபிள் டிவியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேறு இவர் தனது தோட்டத்தில் பருத்திச் செடிக்கு மருந்து அடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு கிடந்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மின்வாரிய அலுவலகத்தில் மின் பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்த அந்தோணி என்பவர் பணி நேரத்தில் மது அருந்திவிட்டு அங்குள்ள உயர் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்திய மின்வாரிய உயர் அதிகாரிகள் அவரை சஸ்பெண்ட் செய்தனர்.
குரும்பூர் அருகே சேதுக்குவாய்த்தான் பகுதியில் இருந்து உடன்குடி செல்லும் பிரதான சாலையில் குடிநீர் இணைப்பு பணிகள் செய்வதற்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு குழி தோண்டியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த குழி தற்போது வரை மூடப்படவில்லை என கூறப்படும் நிலையில் இதில் வாகன ஓட்டிகள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதை சரி செய்ய மக்கள் வலியுறுத்துகின்றனர்.
சாத்தான்குளம் பகுதியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு 70 A என்ற டவுன் பஸ் தினமும் சென்று வருகிறது. இந்த பேருந்தானது ஸ்ரீவைகுண்டத்திற்கு சென்று பின்னர் சாத்தான்குளம் திரும்பும். இந்த பேருந்தில் “கருவேலம்பாடு ” என எழுதப்படுவதற்கு பதிலாக “கருநீலம்பாடு ” என ஊர் பெயர் டிஜிட்டல் பலகையில் எழுதப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் குழப்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.