India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி என்றால் மக்ரூன் எவ்வளவு பெயர் பெற்றதோ அதைப்போல தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் நெய் குச்சி மிட்டாய் புகழ்பெற்றது. நாவில் எச்சில் ஊற வைக்கும் சுவை கொண்டது. முந்திரிப் பருப்பு நெய் சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் இந்த நெய் குச்சி மிட்டாயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த நெய் குச்சி மிட்டாய் தமிழகம் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகி வருகிறது.
எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் ரீதியாக புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசார் பேராசிரியர் மதன்குமார் மீது இன்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
டான்செம் நிறுவனம் சார்பில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் வீரசோழன் அமீன் திருமண மண்டபத்தில் ஏப்.9 அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் விருதுநகர், அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள், கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 86818-78889, 95148-38485 இல் தொடர்பு கொள்ளலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொது மக்களிடம் கடந்த சில நாட்களாக பிரைம் இந்தியா டவர் என்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் என கூறி மர்ம நபர்கள் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு இடம் தேவை என கூறி ஆசை வார்த்தை கூறி பண மோசடியில் ஈடுபட முயன்று வருகின்றனர். இதுபோன்ற சைபர் குற்றங்களில் பாதிக்கப்பட்டால் 1930 அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்களும் குலதெய்வ கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்வதற்கு வசதியாக வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொது மக்களிடம் கடந்த சில தினங்களாக பிரைம் இந்தியா டவர் என்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் என கூறிய மர்ம நபர்கள் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு இடம் தேவை என கூறி ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட முயன்று வருகின்றனர். எனவே இது போன்ற பொதுமக்கள் அதனை நம்ப வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் அருகே அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி திருவிழா, பௌர்ணமி பூஜை, தமிழ் வருடப்பிறப்பு பூஜை சிறப்பாக நடக்கும். மூலஸ்தானத்தில் மயிலேறும் பெருமான் சாஸ்தா முருகன் வேடத்தில் அமர்ந்துள்ளார். பக்தர்கள் பால்குடம் எடுத்தும் ,மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இங்கு வேண்டினால் திருமணத்தடை நீங்குவதாக பக்தர்கள் கருதுகின்றனர். *ஷேர் பண்ணுங்க*
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள்(ஏப்.4) தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 தொழில்நுட்ப உதவியளர்(Field Technician) காலிப்பணியிடம் உள்ளது. இதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 29 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
Sorry, no posts matched your criteria.