Tuticorin

News May 14, 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி – கலெக்டர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் நலன் கருதி ஜமாபந்தி நடைபெற உள்ளது. இந்த ஜமாபந்தி ஆனது வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை அந்தந்த பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

News May 14, 2024

தூத்துக்குடி : நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 14, 2024

தூத்துக்குடியில் மே.22 இல் உள்ளூர் விடுமுறை

image

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் வைகாசி விசாகத் திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழா வரும் 22ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக ஜூன் மாதம் 8 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

தூத்துக்குடி: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 7ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் தூத்துக்குடி மாவட்டம் 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 90.51% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 84.66 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.43 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 14, 2024

தமிழக அரசே தண்ணீர் ஊற்று – மரங்களின் குரல்

image

தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு சாலை ஓரங்களில் நடப்பட்ட மரங்கள் வாடி வருகிறது. இந்நிலையில், சிலேடையில் முகம் தெரியாத நபர்கள், தமிழக அரசு தண்ணீர் ஊற்று என எழுதி வைத்து சென்றுள்ளனர்.  மேலும், “மரத்தை காக்க மனமில்லாதபடி மனிதம் செத்து விட்டதை உணர்த்துகிறது. அரசை எதிர்பார்த்தால் ஒன்றும் நடக்காது. நாம் களமிறங்குவதே தீர்வு” என எழுதியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது. 

News May 14, 2024

+1 RESULT: தூத்துக்குடியில் 93.86% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி சென்னை மாவட்டத்தில் மாணவர்கள் 89.97% பேரும், மாணவியர் 97.19% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 93.86% தேர்ச்சி விகிதம் பெற்று தூத்துக்குடி 10 ஆவது இடத்தை பிடித்துள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 14, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேற்று(மே 13) வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மாதாந்திர பராமரிப்பு தொகை, வங்கி கடன் திருமண உதவித்தொகை போன்றவைகள் பெறுவதற்கு இணையதளம் மூலமே விண்ணப்பிக்கலாம். இதற்காக தாலுகா அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளார்.

News May 14, 2024

தூத்துக்குடி: அசனத்தில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

image

தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கடல் மாதா ஆலய 26 ஆவது ஆண்டு திருவிழா துவங்கி நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான அசன திருவிழா நேற்று(மே 13) இரவு நடைபெற்றது, இதனை ஒட்டி நடைபெற்ற சிறப்பு ஆராதனைக்கு பின்னர் நடந்த சிறப்பு அசன பொது விருந்தில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

News May 13, 2024

தூத்துக்குடி மழைக்கு வாய்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

News May 13, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமை வகித்து தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். முதல் நாளை முன்னிட்டு பல ஜூஸ் உள்ளிட்ட பல்வேறு ஜூஸ் வகைகள் மற்றும் வாழைப்பழம் உள்ளிட்ட பழ வகைகளும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.