Tuticorin

News May 17, 2024

தூத்துக்குடி: மூன்று நாட்களுக்கு சூறைக்காற்று

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு (மே.17- 20) பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News May 17, 2024

எழுத்தாளர் கி ரா.,  மூன்றாம் ஆண்டு நினைவு தினம் 

image

கரிசல் எழுத்தாளர் கி ராஜநாராயணன் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள ராஜநாராயணன் நினைவு மணிமண்டபத்தில் உள்ள ராஜநாராயணன் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் ராஜகோபால், வழக்கறிஞர் கருப்பசாமி, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

News May 17, 2024

திருச்செந்தூர் கோவிலில் ஹச்.ராஜா சாமி தரிசனம்

image

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் தமிழக பாஜக பிரமுகர் எச்.ராஜா இன்று தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவர் மூலவர், சண்முகர் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார்.

News May 17, 2024

தூத்துக்குடி மழைப்பொழிவு விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (மே.16) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருச்செந்தூர் AWS பகுதியில் 6 செ.மீட்டரும், காயல்பட்டினத்தில் 4 செ.மீட்டரும், திருச்செந்தூரில் 3 செ.மீட்டரும், கயத்தாறு, குலசேகரப்பட்டினம் ஆகிய பகுதிகளில் 1செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News May 17, 2024

திருச்செந்தூர் சாலையில் திடீர் பள்ளம்

image

கடந்த 2 நாட்களாக தூத்துக்குடியில் பெய்த மழையின் காரணமாக திருச்செந்தூர் சாலையில் நேற்று திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதுகுறித்து, தகவல் அறிந்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் உடனடியாக அப்பகுதிக்கு சென்று பள்ளத்தை சரி செய்ய உத்தரவிட்டதுடன் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் ஒளிரும் தடுப்பு வேலி அமைத்து போக்குவரத்தை மாற்றிவிட நடவடிக்கை மேற்கொண்டார்.

News May 17, 2024

குலேசகரப்பட்டினத்தில் விண்வெளி ஆய்வு மையம்

image

குலசேகரன் பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது டிட்கோ. விண்வெளி பூங்கா அமைப்பதற்கு இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் டிட்கோ புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ.950 கோடி செலவில் இந்தியாவின் 2வது ஏவுதளம் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. விண்வெளி பூங்கா அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

News May 17, 2024

தூத்துக்குடி ஆட்சியர் எச்சரிக்கை

image

வெளிநாடுகளில் உள்ள சில ஐடி நிறுவனங்கள் இணையதளம் மூலம் அதிக சம்பளம் என்று ஆசை காட்டி இளைஞர்களை சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று அங்கு கால் சென்டர் மோசடி, கிரிப்டோ கரன்சிக்கு மோசடியில் ஈடுபடுத்துவது தெரியவந்துள்ளது. எனவே வெளிநாடு செல்லும் இளைஞர்கள் அயலக தமிழர் நலத்துறை மூலம் நிறுவனங்களை உறுதி செய்து செல்ல தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News May 17, 2024

தூத்துக்குடி: நுகர்வோர் நீதிமன்றம்அதிரடி உத்தரவு

image

ஆறுமுகநேரி வாலவிளையைச் சார்ந்த திவ்யா என்பவர் பெயரில் அவரது தந்தை கார்டியனாக இருந்து பணத்தை திருச்செந்தூரிலுள்ள கூட்டுறவு நகர வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு வங்கி சார்பில் பணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்திய நுகர்வோர் நீதிமன்றம் ரூபாய் 1,35,249 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர் .

News May 17, 2024

தூத்துக்குடி: மிதமான மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி வரை ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News May 17, 2024

நன்கொடை வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா

image

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அரசு பொது நூலகத்திற்கு கம்ப்யூட்டர் மேஜைகள்  வாங்குவதற்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு வள்ளுவர் வாசகர் வட்ட தலைவரும், ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான அய்யாக்குட்டி தலைமை வகித்தார். மேஜைகள்  வாங்குவதற்கு நன்கொடை   வழங்கிய புனித லூக்கா சமுதாய கல்லூரி  இயக்குனர் பேராசிரியர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.