Tuticorin

News December 10, 2024

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது.

News December 9, 2024

தூத்துக்குடி மக்கள் குறைதீர் கூட்டம் நிறைவு

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வீட்டுமனை பட்டா என 447 மனுக்கள் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். மனுக்களை மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்தார்.

News December 9, 2024

சோனியாகாந்தி பிறந்தநாள் கனிமொழி எம்பி வாழ்த்து

image

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு கனிமொழி எம்பி இன்று தனது முகநூல் பக்கத்தில், “இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்; தேசத்திற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் ஊக்கமளிக்கும் தலைமை ஆகியவை இந்திய அரசியலுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன” என தெரிவித்துள்ளார்.

News December 9, 2024

மகளிர் சுயஉதவி குழுவில் ரூ.13.45 லட்சம் மோசடி

image

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி எஸ் எஸ் கோவில் தெருவில் விநாயகர் மகளிர் சுய உதவி குழுவில் கடனாக பெற்ற ரூ.13.45 லட்சம் பணத்தை உத்திரச்செல்வி என்ற பெண் மோசடி செய்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று (டிச.9) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் விநாயகர் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் புகார் மனு கொடுத்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

News December 9, 2024

சக்தி மாலை இருமுடி விழா: சென்னைக்கு பகலில் ரயில்!

image

மேல்மருவத்தூரில் வரும் டிச.,15 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்.,11 ஆம் தேதி வரை தைப்பூச சக்தி மாலை இருமுடி விழா நடைபெற உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள், குறிப்பாக பெண்கள் கலந்து கொள்வது வழக்கம். இவர்கள் மேல்மருவத்தூர் செல்வதற்கு வசதியாக பகல் நேரத்தில் சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என தூத்துக்குடி ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News December 8, 2024

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (டிச08) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.

News December 8, 2024

சமூக சேவகருக்கு ஐஐடி சார்பில் சிறப்பு விருது வழங்கல்

image

தூத்துக்குடி மாவட்டம் சாஸ்தாவிநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த லூர்துமணி என்பவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு தன்னலமற்ற சேவைகளை செய்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு சென்னை ஐஐடி சார்பில் இன்று அவருக்கு சிறந்த தன்னார்வலர் விருது வழங்கப்பட்டது. இதில் ஐஏஎஸ் அதிகாரி கந்தசாமி விருது வழங்கினார்.

News December 8, 2024

கயத்தாறு அருகே மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பலி

image

கயத்தாறு அருகே கங்கணங்கிணறு ஊரைச் சேர்ந்த விவசாயி முனியசாமி, இவரது மகன் வினோத் குமார் (23). இவர் டூவீலர் மெக்கானிக் கடையில் தினக்கூலியாக வேலைசெய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை கிருஷ்ணன் என்பவரது தோட்டத்தில் பம்புசெட் கிணற்றில் மின் வயர் பழுதுபார்த்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 8, 2024

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (டிச07) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.

News December 7, 2024

புன்னக்காயலை சேர்ந்தவர் சிறந்த மாலுமியாக தேர்வு

image

சி லைன் குரூப் ஆண்டுதோறும் சிறந்த மாலுமிகளை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 2024 சிறந்த கடல் மாலூமிக்கான விருது புன்னக்காயலை சேர்ந்த அன்டன் பல்தான் என்பவருக்கு கிடைத்துள்ளது. சிறந்த மாலுமியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்டன் பல்தானை அகில இந்திய மீனவர் சங்கத் தலைவர் ஆன்டன் கோமஸ் பாராட்டியுள்ளார்.

error: Content is protected !!