India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாதந்தோறும் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வரும் 14ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வைத்து பொது விநியோக திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவைகளை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடை துறை சார்பில், கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஆறாவது சுற்று இம்மாதம் 16 ஆம் தேதி துவங்கி அடுத்த ஆண்டு ஐந்தாம் தேதி வரை 21 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு கோமாரி என்னும் வைரஸ் தொற்று நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
2001-06 அதிமுக ஆட்சிகாலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்தபோது ரூ.4.90 கோடி மதிப்பில் முறைகேடாக சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதுகுறித்து, 10 சார் பதிவாளர் அலுவலகங்களில் பெறப்பட்ட சொத்து விபரங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றது. அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளார்.
தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கலியாவூர் பகுதியில் இருந்து புன்னக்காயல் வரையிலான தாமிரபரணி ஆற்றுக் கரையோர பகுதியில் உள்ள மக்கள் ஆற்றங்கரையோரம் செல்லக் கூடாது என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 97 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி கோவில்பட்டியை சேர்ந்த சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் பிணமாக மீட்கப்பட்டான். மேலும், சிறுவன் கழுத்தில் இருந்த நகை மாயமாகியிருந்தது. இந்நிலையில், சிறுவனின் கொலை வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலைவழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக பீடி இலைகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதை தொடர்ந்து தூத்துக்குடி சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பந்தல்குடி அருகே உள்ள குடோனுக்கு திடீரென சென்று சோதனை செய்ததில், 8 ஆயிரத்து 305 கிலோ பீடி இலை, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி, பேக்கிங் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் வரும் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு கலைஞர் அரங்கத்தில், மாவட்ட அவை தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வருகை குறித்தும், திமுக வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக இன்று(டிச.,12) அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று(டிச.,12) அதி கனமழைக்கான ‘RED ALERT’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குமரி, சென்னை, காவிரி படுகை பகுதிகளில் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியினால், காலை முதலே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. SHARE IT
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று(டிச.,12) தனது முகநூல் பக்கத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மூத்த அரசியல்வாதி சரத் பவார். அவரது உறுதியான தலைமையும், நமது தேசத்தை பிளவுபடுத்தும் சக்திகளிடமிருந்து பாதுகாப்பதில் முக்கியமானது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் மேலும் பல ஆண்டுகள் தேசத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று(டிச.,12) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. SHARE IT.
Sorry, no posts matched your criteria.