India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென் மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகமாக ஏற்பட்டால் முதலமைச்சர் உத்தரவின் பேரில் நானும் வருவேன் என்று துணை முதலமைச்சர் கூறியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் பாதிப்புகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர். தேவைப்படும் பட்சத்தில் நானும் தென் மாவட்டத்திற்கு விரைந்து செல்வேன் என்று துணை முதலமைச்சர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் இன்று(டிச.,14) காலை 6 மணி வரை மாவட்ட முழுவதும் 624.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 121 மில்லி மீட்டரும், சாத்தான்குளத்தில் 107 மில்லி மீட்டரும், கோவில்பட்டியில் 80 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக இன்று அனைத்து விதமான பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிவித்துள்ளார். இன்று எந்த சிறப்பு வகுப்புகளும் கட்டாயம் நடத்தக் கூடாது எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை 6:00 மணி நிலவரப்படி கோரம்பள்ளம் குளம் 3500 கன அடி நீரும், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையிலிருந்து 4700 கன அடி நீரும் மருதூர் அணைக்கட்டில் இருந்து 73,000 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த மழையினால் மாவட்டத்தில் 100 வீடுகள் பகுதியாகவும் 2 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. நிவாரண முகாம்களில் 639 பேர் தங்கி உள்ளதாக ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
“கடனாநதி-ராமநதி அனையிலிருந்து வினாடிக்கு 22,000 கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று (டிச.13) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கொட்டும் கனமழையின் தாக்கத்திலிருந்து தூத்துக்குடி மாவட்ட மக்களைக் காக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள், உணவு – குடிநீர் – மருத்துவ வசதிகள் உள்ளிட்ட விவரங்களைக் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்களிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி மூலமாக ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், இரண்டு நாட்களாக இதுவரை பெய்த மழையில் மண் சுவற்றால் கட்டப்பட்ட இரண்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஸ்ரீவைகுண்டம், ஏரல் ஆற்று கரையோரம் உள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூகளில் நாளை (டிச.14) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக தேர்வாணையர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட கல்லூரிகளும் இந்த பல்கலை.யில் இணைவு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. *உங்கள் பகுதி கல்லூரி மாணவர்களுக்கு பகிரவும்*
கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.14) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். SHARE பண்ணுங்க மக்களே
கோவில்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுவன் மர்மமான முறையில் அவரது பக்கத்து வீட்டு மாடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் குறித்த வழக்கை விசாரிக்க 2 ஏடிஎஸ்பிக்கள், 4 டிஎஸ்பிக்கள் கொண்ட 10 குழுக்கள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை 36 சாட்சிகளிடமும், 9 சந்தேக நபர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறது என SP ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.