India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆறு, நம்பியாறு மற்றும் கருமேனி ஆறு நதிநீர் இணைப்பு திட்டத்தின் மூலம் கருமேனி ஆறு திருப்புமுனைக்கு தற்போது 1500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் மற்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தினால் மலை தொடர்பாக ஏற்படும் பாதிப்புகள் மற்றும் குறைகளை தெரிவிக்க அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணிற்கும் whatsapp எண் 9384056221 என்ற எண்ணிற்கு வீடியோ மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தூத்துக்குடி விமான நிலைய ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து வரும் விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று மாலை 3:10 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் மற்றும் பெங்களூரு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில், “காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்; இத்துயர்மிகு வேளையில் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பௌர்ணமியை முன்னிட்டு இன்றும் (டிச.14) நாளையும் அதிக அளவில் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு சாலைகளில் மழை நீர் செல்வதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த இரு நாட்களும் திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கனமழை பாதிப்பு காரணமாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, . தூத்துக்குடி- மைசூர் விரைவு ரயில் மாலை 5.15 மணிக்கும், சென்னை செல்லும் முத்துநகர் விரைவு ரயில் இரவு 8.25-க்கும், தூத்துக்குடி – பாலக்காடு விரைவு ரயில் இரவு 10- மணிக்கும் மீளவிட்டானில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நேரடியாக சென்று அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார். தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் என்றும் பாதுகாப்பாக இருக்கும் வரை கேட்டுக்கொண்டார்.
தென் மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகமாக ஏற்பட்டால் முதலமைச்சர் உத்தரவின் பேரில் நானும் வருவேன் என்று துணை முதலமைச்சர் கூறியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் பாதிப்புகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர். தேவைப்படும் பட்சத்தில் நானும் தென் மாவட்டத்திற்கு விரைந்து செல்வேன் என்று துணை முதலமைச்சர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் இன்று(டிச.,14) காலை 6 மணி வரை மாவட்ட முழுவதும் 624.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 121 மில்லி மீட்டரும், சாத்தான்குளத்தில் 107 மில்லி மீட்டரும், கோவில்பட்டியில் 80 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக இன்று அனைத்து விதமான பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிவித்துள்ளார். இன்று எந்த சிறப்பு வகுப்புகளும் கட்டாயம் நடத்தக் கூடாது எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.