India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் இந்த புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக வரும் 30 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வரவுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.
குமரி திருவள்ளுவர் சிலை வடித்து 25 ஆண்டுகள் நிறைவுற்றதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு, மாநில அளவிலான வினாடி-வினா போட்டி டிச.,28ஆம் தேதி விருதுநகரில் நடக்கிறது. மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தூத்துக்குடியிலிருந்து 9 போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான மாவட்ட அளவிலான தேர்வு டிச.,21ம் தேதி தூத்துக்குடியில் நடக்கிறது. இதில் பங்கேற்க டிச.,20 மாலைக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 19-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று(டிச.17) குற்ற வழக்குகள் சம்பந்தமான ஆய்வு கூட்டம் ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கஞ்சா புகையிலை போன்ற போதைப் பொருள்களை விற்பனை செய்பவர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பி காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.
“ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை திமுகவும், திமுக தலைவரும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்பினாலும், திமுகவின் எதிர்ப்பு உறுதியானது” என்று திமுக எம்பியும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் வழியில் கல்வி பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றிய ஆலோசனை கூட்டம் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வைத்து அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வ.உ.சி. துறைமுகம் மூன்றாவது சர்வதேச சரக்கு பெட்டகம் முனையத்தில் கிரேன் ஆபரேட்டர்கள், பாதுகாவலர், மனித வளம் மற்றும் நிதி என அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியாற்றுகின்றனர். ஒட்டுமொத்தமாக 40% பேர் பெண்கள் தான் பணிபுரிகின்றனர் என துறைமுகம் சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி திரேஷ் பரத்தை சேர்ந்த டி. பாலன் என்பவர் பரதவர் முன்னேற்ற பேரவையின் தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அணிக்கு தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இன்று பரதவர் முன்னேற்ற பேரவை தலைவர் டாக்டர் தயாளன் தெரிவித்துள்ளார். மேலும் புதிய பொறுப்பாளருக்கு அமைப்பினர் முழு ஒத்துழைப்பு அளிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவை இன்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சந்தித்தார். அப்போது “தமிழ்நாடு மற்றும் தூத்துக்குடிக்கு கூடுதல் ரயில் சேவை வேண்டும்” என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் இரவு நேரம் மற்றும் மழை காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்கச் செல்லும்போது விஷ பூச்சிகளால் பிரச்னை ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பம்பு செட்டுகளை தொலைவில் இருந்து செல்போன் மூலம் இயக்கவும் நிறுத்தவும் உதவும் கருவியை அரசு மானியத்தில் வழங்க உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.