India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மூத்த திரைப்பட இயக்குனர் ஷியாம் பெனகல் மறைவையொட்டி தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது முகநூல் பக்கத்தில்; தொலைநோக்கு திரைப்பட தயாரிப்பாளரும் இணை சினிமாவின் முன்னோடியுமான ஷியாம் பெனகல் இழப்பால் ஆழ்ந்த வருத்தம். அரசியல் ஆழம் மற்றும் இந்தியாவின் சமூக யதார்த்தங்களுடனான தொடர்பு ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட அவரது பணி தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில், திராவிட இனத்தின் எரிதழலாய், கொள்கைப் பேரொளியாய், பகுத்தறிவுச் சுடராய், ஆதிக்க சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாய், சமரசமற்ற போர்க்குரலாய், என்றென்றும் தமிழ்நாட்டின் அரணாய் காத்து நிற்கும் தன்னிகரற்ற தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினம் இன்று. கொள்கைத் தடியை கையிலேந்தி சாதி மத ஆதிக்க பிரிவினை சக்திகளை வேரறுப்போம், என குறிப்பிட்டுள்ளார்.
கோவில்பட்டி தபால் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நேற்று(டிச.23) விடுத்துள்ள செய்தி குறிப்பில், சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதத்தை பக்தர்களின் வீட்டிற்கு கொண்டு சென்று சேர்க்கும் வசதியை இந்திய தபால் துறை வழங்கியுள்ளது. ஒரு பார்சலின் விலை ரூ.520. இதனைப் பெற அருகிலுள்ள தபால் நிலையங்களுக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கட்டணம் செலுத்தினால் வீடு தேடி பார்சல் வரும் என தெரிவித்துள்ளார்.SHARE IT.
தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த நிக்கோலஸ் உட்பட 3 பேரிடம், காரைக்குடியை சேர்ந்த வினோத் என்பவர் துபாய் கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சத்து 10 ஆயிரம் மோசடி செய்துள்ளார். இது சம்பந்தமாக நிக்கோலஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரை தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் வினோத்தை நேற்று(டிச.23) கைது செய்துள்ளனர்.
திருச்செந்தூர் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்கள் தங்கள் பாவங்களை களைவதற்கு அணிந்திருக்கும் உடைகளை கடலில் வீசி செல்கின்றனர். இவ்வாறு கடலில் வீசும் ஆடைகள் கடலுக்கு சீர்கேட்டை ஏற்படுத்துவதுடன் கரைக்கு வந்து, கடலில் பக்தர்கள் நீராடும்போது காலில் சிக்கி விபத்துகளை ஏற்படுத்தும் சூழலும் உள்ளது. எனவே இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று(டிச.23) இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் இன்று (டிச.23) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கல்வி உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 467 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று(டிச.23) விழிப்புணர்வு அட்டை வெளியிடப்பட்டது. அதில், “இணையதளத்தை பயன்படுத்தும் பெண்கள் அதில் தங்களது புகைப்படம் மற்றும் தனிப்பட்ட விவரங்களை பதிவிடக்கூடாது; இதன் மூலம் சைபர் குற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் அனைவரதநல்லூர் கிராமத்தை சேர்ந்த மகாராஜா(35) என்பவர் இன்று(டிச.,23) அதிகாலை மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரத்த வெள்ளத்தில் மகாராஜா கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டியில் நேற்று(டிச.,22) இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சாதி ரீதியிலான மோதல்கள் அதிகரித்துள்ளதாக விமர்சித்தார். தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.