India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி MP கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில், பொதுவுடைமை சித்தாந்தத்தின் போர்வாளாக, சமரசமற்ற மக்கள் போராளியாக, எளிய வாழ்விற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர நல்லகண்ணு நூற்றாண்டு பிறந்தநாளில், எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன், இன்னும் பல ஆண்டுகள் சமூகப் பணியைத் தொடர விழைகிறேன் என்றுள்ளார்.
ஸ்ரீ வைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர் சூட்டி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 85 ஆண்டுக்கு மேலாக மக்கள் பணியில் ஈடுபட்ட நல்லக்கண்ணுவை போற்றும் வகையில், ஸ்ரீ வைகுண்டம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தி பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார் . அப்போதைய நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவரான இவர், 18 வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து மக்கள் பணியை தொடங்கினார்.
2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலை வந்து ஆயிரம் ஆயிரம் மனித உயிர்களை சுருட்டிக் கொண்டு போன தினம் இன்று(டிசம்பர் 26). கண்மூடி திறப்பதற்குள் மனித உயிர்களை சுனாமி காவு வாங்கிச் சென்று இன்றோடு 20 ஆண்டுகள் ஆகிறது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்த சுனாமியின் நினைவு தூத்துக்குடி உட்பட கடலார பகுதி மக்கள் மனதில் ஆறாத வடுக்களாகவே உள்ளன. இனியும் ஒருமுறை சுனாமி கோரத்தாண்டவம் ஆடக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (டிச25) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில்
குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்பு
கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் தற்போது சாத்தான்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அரவை கொப்பரை குறைந்தபட்ச ஆதார் விலையின் அடிப்படையில் கிலோ ஒன்றுக்கு ரூ.111.60 என்ற விலையில் இம்மாதம் முழுவதும் கொள்முதல் செய்யப்படவுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தங்கள் விளை பொருள்களை பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டு கொண்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் பகுதியை சேர்ந்தவர்கள் விக்னேஷ்(34), செல்வராஜ்(42), விஜயகுமார்(29). இவர்கள் இன்று(டிச.25) காரில் திருச்செந்தூர் வந்து கொண்டிருந்தபோது, எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராத விதமாக கார் விபத்துக்குள்ளானதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கோவில்பட்டி வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்த தம்பதி குருசாமி – சாந்தி. சாந்தி நேற்று(டிசம்பர் 24) வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, குக்கர் வெடித்து சிதறி படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், சாந்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (டிச.24) இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்பொழுதே வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பைக் ரேஸில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு ஈடுபட்டால் அவர்களது இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படும். மேலும் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
மூத்த திரைப்பட இயக்குனர் ஷியாம் பெனகல் மறைவையொட்டி தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது முகநூல் பக்கத்தில்; தொலைநோக்கு திரைப்பட தயாரிப்பாளரும் இணை சினிமாவின் முன்னோடியுமான ஷியாம் பெனகல் இழப்பால் ஆழ்ந்த வருத்தம். அரசியல் ஆழம் மற்றும் இந்தியாவின் சமூக யதார்த்தங்களுடனான தொடர்பு ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட அவரது பணி தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.