India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்ட தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடி உற்பத்தி மற்றும் பரப்பளவை அதிகரிக்க செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5,400 பின்னேற்பு மானியம் வழங்கப்பட உள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஆழ்ந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிப்பதாக தூத்துக்குடி MP கனிமொழி தனது முகநூல் பக்கத்தில்(டிச.27) பதிவிட்டுள்ளார் . மேலும், சிறந்த அரசியல்வாதியும், நவீன இந்தியாவின் சிற்பியும் ஆவார். அவரது தலைமையும், தொலைநோக்கு பொருளாதாரக் கொள்கைகளும் இந்தியாவை முன்னேற்றப் பாதையை நோக்கி இட்டுச் சென்றன என்றுள்ளார்.
தமிழக முதல்வர் இம்மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். முதல்வர் வருகைக்காக மூன்றாவது மைல் மற்றும் கோரம்பள்ளம் ஆகிய பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை நேற்று(டிசம்பர் 26) மாநகராட்சி மேயர் ஜெகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.
தூத்துக்குடி தனிப்படை போலீசார் நேற்று (டிச.26) புதுக்கோட்டை பகுதியில் திடீர் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த இருவரை பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இதில் வினித் ராஜ் என்பவரை மட்டும் போலீசார் பிடித்து சோதனை செய்வதில் அவரிடம் 1 கிலோ 900 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் புதுக்கோட்டை போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (டிச26) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில், குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு உளுந்து, பாசி, சிறுதானிய விதைகள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தரமான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் மற்றும் உயிரியல் காரணிகள் 50 சதவீத மானியத்தில் இங்கு வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும்பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நாளை (டிச27) தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், சார்பு அணியினர், மகளிர் அணியிணர் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் S.P சண்முகநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி +2 மாணவர்களுக்கான இலவச பொதுத்தேர்வு வழிகாட்டுதல் மற்றும் சிறப்பு நீட் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. ஜன.5, ஏப்.6 ஆகிய 2 நாட்கள் வ.உ.சி கல்லூரியில் நடைபெறும் பயிற்சியில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். ஆர்வமுள்ள மாணவர்கள் <
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை பூர்வீகமாக கொண்ட “தகைசால் தமிழர்” நல்லகண்ணுவின் 100வது பிறந்தநாள் இன்று (டிச.26) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதில் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று(டிசம்பர் 26) தனது ‘X’ தளத்தில் ஒரு முக்கியமான பதிவு பதிவிட்டுள்ளார். அதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்புணர்வு சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. மேலும் அவருக்கு உடனடியாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை உறுதி செய்வது நமது கடமை என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.