India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடியில் இன்றும் , நாளையும் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (டிச29) விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் வைத்து முதல்வரை வரவேற்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வரை தமிழ் வழியில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இத்திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் நாளை (30) முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தூத்துக்குடியில் இத்திட்டத்தினை தமிழக முதல்வர் துவங்கி வைக்கிறார். இதன் மூலம் 75,028 மாணவிகள் பயன்பெறுகின்றனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடியில் இன்றும் (29) நாளையும் (30) நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பகல் 12 மணிக்கு தூத்துக்குடிக்கு வருகை தர உள்ளார். அவர் மாலை 5 மணிக்கு தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் கட்டப்பட்டுள்ள மினி டைட்டல் பார்க்கை திறந்து வைக்கிறார். பின்னர் மாலை 5.30 மணிக்கு மாணிக்க மஹாலில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். *ஷேர்*
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த மேகநாதன் (72) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு தூத்துக்குடி நீதிமன்றம் 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து இன்று(டிச.28) தீர்ப்பு வழங்கியது.
தூத்துக்குடியில் வரும் திங்கட்கிழமை (30.12.2024) அன்று முதலமைச்சர் தலைமையில் காமராஜ் கல்லூரியில் புதுமைப்பெண் திட்ட துவக்க விழா நடைபெற உள்ளது. நிகழ்ச்சி காலை 8.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதில் கல்லூரி மாணவிகளும் பேராசிரியர்களும் கலந்துகொள்வர் மற்றும் மாணவர்களுக்கு பரிசு புத்தகங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளையும் நாளை மறுநாளும்(டிச.29,30) தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அவரது வருகையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் முதல்வர் திட்டமிட்டபடி தூத்துக்குடி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் இன்று (டிச.27) இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள காவல்துறையினரின் செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசரகால எண் 100, ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது
தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று டெல்லியில் உள்ள மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார். துயர்மிகு இவ்வேளையில் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதலையும் அப்போது அவர் தெரிவித்துக் கொண்டார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இம்மாதம் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவை தொடர்ந்து முதல்வரின் தூத்துக்குடி வருகை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்ட தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடி உற்பத்தி மற்றும் பரப்பளவை அதிகரிக்க செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5,400 பின்னேற்பு மானியம் வழங்கப்பட உள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.