India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி மற்றும் ராஜன்தாங்கல் சுற்றுவட்டார பகுதியில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. காஞ்சி, நயம் பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேற்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்ப்பாலூர், வில்வாரணி, தாமரைபாகம், கடலாடி, ராஜாந்தாங்கல், பொலகுணம், செல்லங்குப்பம், இசுகாழிகட்டேரி, கொளத்தூர் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கிரிவலப் பாதையில் மகா தீபம் மற்றும் பவுர்ணமி விழாக்களை முன்னிட்டு 4 நாட்களில் சுமார் 300 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. 4,110 தூய்மை பணியாளர்கள் கிரிவலப் பாதையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். கிரிவலப் பாதையில் உள்ள குப்பைகள் உடனே அகற்றப்பட்டு, பொதுமக்கள் தூய்மை பணியாளர்களை பாராட்டினர்.
செங்கம் அடுத்த மேல்செங்கம் வனப்பகுதியில் திருவண்ணாமலை கிரிவலம் சென்று விட்டு பெங்களூரை நோக்கி சென்ற காரும், திருவண்ணாமலை மாவட்டம் காப்பளுர் பகுதியை சேர்ந்த ராமு என்பவர் மகன் சஞ்சய் ஒட்டிச்சென்ற பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சஞ்சய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேல்செங்கம் போலிசார் உடலை கைப்பற்றி செங்கம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல்செங்கம் அடுத்த அரசங்கன்னி வனப்பகுதியில் பெங்களூர் பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் திருவண்ணாமலை பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் சென்றுவிட்டு பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் இறங்கியது சேற்றில் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 4 பேரும் உயிர்தப்பினர்.
தி.மலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சமுதாய நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார்’ விருது, ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தன்று வழங்கப்படும். நடப்பு ஆண்டிற்கான, ‘கபீர் புரஸ்கார்’ விருதுக்கு, சமுதாய நல்லிணக்க செயல் புரிந்தோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தினை இன்றுக்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள 697 ஏரிகளில் 363 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மேலும், 70 ஏரிகள் 75 சதவீதத்திற்கும் மேல் நிரம்பி உள்ளன. 50 சதவீதத்திற்கும் மேல் 117 ஏரிகள் மற்றும் 25 சதவீதத்திற்கும் மேல் 147 ஏரிகள் நிரம்பியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே முதல்முறையாக திருவண்ணாமலை மலை தீபம் குறியீட்டுடன் 3 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆசிரியர்கள் வெங்கடேசன் மற்றும் செந்தில் ஆகியோர் கொடுத்த தகவலின்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து ஊத்தங்கரை ஒன்றியம் கானம்பட்டி, இருசங்கு குட்டை என்ற கிராமத்தில் மூன்று இடங்களில் குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
தி.மலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 10 ஆம் திருநாளான இன்று வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சியளிக்கும் அர்த்தநாரீசுவரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை முன்னிட்டு, அர்த்தநாரீசுவரருக்கு சிறப்பு அபிஷேக மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. இந்நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அருணாசலேஸ்வரா் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இன்று (டிச.13) உள்ளூர் விடுமுறையை அறிவித்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 119 அடி கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117.45 அடியை எட்டி உள்ளது. சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 2,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் 6 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.