India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க <

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பெரியார் தெருவை சேர்ந்த நடராஜன் (38), அவரது மனைவி பிருந்தா (28) ஆகியோர் தொழில் தொடங்க தாட்கோவில் கடனுக்கு முயற்சி செய்துள்ளனர். லோன் கிடைக்க தாமதமானதால், கைக்குழந்தையுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 9) மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக காவல்துறையினர் அவர்களைத் தடுத்து, கைது செய்தனர்.

திருவண்ணாமலை மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

தி.மலை மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <

1.மாநகராட்சி -1 ( தி.மலை)
2.நகராட்சி- 6 ( ஆரணி, திருவத்திபுரம், வந்தவாசி, போளூர், செங்கம், சேத்துப்பட்டு)
3.பேரூராட்சிகள்- 10
4.வருவாய் கோட்டம்- 3
5.தாலுகா- 12
6.வருவாய் வட்டங்கள் – 12
7.வருவாய் கிராமங்கள்- 1067
8.ஊராட்சி ஒன்றியம்- 18
9.கிராம பஞ்சாயத்து- 860
10.MP தொகுதி- 2 ( தி.மலை, ஆரணி)
11.MLA தொகுதி- 8
12.மொத்த பரப்பளவு – 6,188 ச.கி.மீ
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

தேர்தலை முன்னிட்டு பாமகவினர் பம்பரமாய் வேலை செய்து வருகின்றனர். போளூரில் வருகின்ற நாளை (மார்ச்.10) பாமக செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. கிழக்கு மேடு கூட்ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தி, பாமக மாவட்ட செயலாளர் வேலாயுதம் தலைமையில், மாநில இளைஞர் அணி தலைவர் கணேஷ்குமார் சிறப்புரை ஆற்றுகிறார். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வெம்பாக்கம் தாலுகா பல்லாவரம் கிராமம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகப்பன் (81). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டுக்கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.8) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தி.மலை மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.