India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (17.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மாதம் தீபத்திருவிழா 2024 திருவண்ணாமலை மகாதீபத்தின் போது பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அத்துமீறி மலை மீது ஏறி 2 நாட்களாக தவித்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை 17/12/2024 இன்று செவ்வாய் கிழமை மீட்டு முதுகில் சுமந்துவந்த வனக்காப்பாளர்கள்.
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் டிச.20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகிக்கிறாா்.எனவே,மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள்,விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் பொதுமக்களிடமிருந்து 433 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்கள் மேலும் மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (டிச. 20) நடைபெறும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபா்களை தோ்வு செய்ய உள்ளன. என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் ஒழிப்பு குறித்து ஆய்வுக் கூட்டம், ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று (16-12-2024) நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் ராமப்ரதீபன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தி.மலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில், 3ஆம் நாள் தெப்பல் உற்சவம் நேற்று (16.12.2024) இரவு அய்யங்குளத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, குளத்தை வலம் வந்தார். இந்நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கடந்த 13ஆம் தேதி மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை கூடி கார்த்திகை தீபத்தை கண்டு வணங்கினர். 4ஆவது நாளான இன்று மாலை திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் எரியும் காட்சி மிகவும் ரம்யமாக உள்ளது. இன்று மார்கழி மாதம் பிறந்ததை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் தீப தரிசனத்தை வணங்கிய வண்ணம் உள்ளனர்.
தி-மலை மாவட்டத்தில் மது விலக்கு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 215 பலதரப்பட்ட வாகனங்கள் தமிழ்நாடு அரசனையால் குறிப்பிட்டுள்ள சட்டப்பிரிவு 14 (4) படி வரும் 18.12.2024 அன்று காலை 9 மணிக்கு தி-மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாக ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் மது விலக்கு பிரிவை 89394 73233 தொடர்பு கொள்ளவும்.
சாத்தனூர் அணையில் வரலாற்றில் காணாத நீர்வரத்து அதிகரித்ததால், அதன் உறுதித்தன்மையை பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்தனர். வெள்ள அபாயத்தைக் கண்காணிக்க, 116 அடியில் நீரை தேக்கி, உபரிநீரை தென்பெண்ணையாற்றில் விடப்பட்டது. பொதுமக்களுக்கு நீர்வரத்து விவரங்கள் அறிவிக்கப்பட்டு, முதன்மை பொறியாளர் மன்மதன் தலைமையில் மதகு, கால் வாய்கள் ஆய்வு நடத்தப்பட்டது.
Sorry, no posts matched your criteria.