India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை-செங்கம் சாலை, ஆணாய்பிறந்தான் ஊராட்சியில் தமிழ்நாடு உழவா் பேரியக்கம் சார்பில் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், பாமக நிறுவனா் ராமதாஸ், மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு உழவா் பேரியக்க நிா்வாகிகள், உறுப்பினா்கள், உழவா்கள் தமிழகம் முழுவதும் இருந்து லட்சம் பேர் கலந்து கொண்டனர். மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ் மாநாட்டிற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (21.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் பள்ளி கல்வி, வருவாய் துறை சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தண்டராம்பட்டு தனியார் பள்ளி மாணவி ஜனனி, தங்கம் பதக்கம் வென்றார். மேலும், மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவிக்கு உடற்பயிற்சி பெறும் சக கராத்தே பயிற்சி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
வடக்கு, தெற்கு திருவண்ணாமலை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் 23-12-2024 திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு திருவண்ணாமலை திராவிட முன்னேற்றக் கழக அலுவலக வளாகத்தில் நடைபெறும். பல்வேறு ஆலோசனைகள் மற்றும் கருத்துரைகள் நடைபெறும். செயற்குழுக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்துகிறது. முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 12 பேருக்கு தொடர்ந்து பயிற்சி வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் நுழைவுச் சீட்டு நகலுடன் நேரடியாகவோ அல்லது 04175-233381 எண்ணில் தொடர்புகொண்டு பெயர் பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், இன்று வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் தனியார் தொலைக்காட்சி சார்பாக +2 தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் தலைமுறை அரசியல் பிரிவு ஆசிரியர் திகார்த்திகேயன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (20.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் புகார்களை விசாரிக்க “உள்ளக புகார் குழு” அமைக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். குழுவில் தலைமை அலுவலர், மூத்த பெண் அலுவலர் உள்ளிட்டோர் இருப்பார்கள். www.shebox.nic.in மூலம் புகார்களை பதிவு செய்யலாம். அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.
கலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையம் மற்றும் தாளாண்மை இதழ் இணைந்து நடத்தும் மாநில அளவிலான இயற்கை வேளாண்மை பயிற்சி பட்டறை டிசம்பர் 21, 22 தேதிகளில் கலசப்பாக்கத்தில் நடைபெறுகிறது. அனைத்து விவசாய வேளாண்மை செயல் வீரர்களும் கலந்து கொள்ளலாம், நுழைவு கட்டணம் இல்லை. முன்பதிவு அவசியம். மேலும் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் அவர்களை (8072314815) தொடர்பு கொள்ளவும்.
108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் டிரைவர்பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் திருவண்ணாமலை அரசுமருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில்நாளை சனிக்கிழமை நடக்கிறது. டிரைவர் பணிக்கு டிச.10ஆம் நடக்கிறது. டிரைவர் பெற்றிருக்க வேண்டும்.இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள்மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து ஓராண்டு நிறைவு பெற்று இருக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.