Tiruvannamalai

News January 1, 2025

பொது மக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய காவல்துறை

image

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி சேத்துப்பட்டு நகரம் காவல் நிலையம் சார்பாக பஜார் நான்கு முனை சந்திப்பில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுடன் காவல்துறை அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். உடன் காவல் துறையினர் மற்றும்  துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News January 1, 2025

தி.மலை எம்.பி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிப்பு

image

உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் 2025-ஆங்கில புத்தாண்டு தினத்தை விமர்சையாக கொண்டாடிவருகின்றனர். இதனையொட்டி, இன்று திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.என்.அண்ணாதுரை அவர்கள் பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு தின நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

News January 1, 2025

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி சைக்கிள் போட்டி 

image

தமிழக முதல்வரின் உத்தரவின்படி, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 4-ந் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடக்கிறது. 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டி பல இடங்களில் தொடங்கி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முடிகிறது. முதல் 3 இடங்களுக்கு ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 பரிசு வழங்கப்படும் என திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News December 31, 2024

இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (31.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 31, 2024

சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்கலாம்

image

சேத்துப்பட்டு அருகே வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்ய வனத்துறை சிறப்பு குழு கண்காணிக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருந்து வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம். காளைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தகவலுக்கு 97901 50045 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இதனைத் தெரிவித்தார்.

News December 31, 2024

தி.மலை:  உண்டியல் காணிக்கை ரூ.2.41 கோடி 

image

 திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில்,  கார்த்திகை மாத  உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று திருக்கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில்   கோவில் இணை ஆணையர் ஜோதி தலைமையில், நிரந்தர உண்டியல், கார்த்திகை தீபம் வெள்ளிக்குடம் உண்டியல் உள்ளிட்டவை திறக்கப்பட்டதில் ரூ.2.41 கோடி ரொக்கம், 65 கிராம் தங்கம், 1,350 கிராம் வெள்ளியை பக்தர்கள் செலுத்தியுள்ளனர். 

News December 31, 2024

தி.மலையில் 470 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் பொதுமக்களிடமிருந்து  470 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்கள் மேலும் மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News December 30, 2024

கேளூர் பால்வார்த்து வென்றான் தினசரி மார்க்கெட் விலை நிலவரம்

image

போளூர் – அடுத்த கேளூர் பால்வார்த்து வென்றான் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திருவண்ணாமலை விற்பனைக்குழு சார்பில், இன்றைய நெல் ரகங்களின் குவிண்டால் தினசரி மார்க்கெட் விலை நிலவரப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பயன் பெறலாம் என ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 30, 2024

தி.மலை மாவட்ட  ஆட்சியர் அழைப்பு

image

திருவண்ணாமலையில் கட்டப்பட்டுள்ள முன்னாள் படைவீரா் மாளிகையின் முதல் தளத்தில் 9 விருந்தினா் அறைகள் உள்ளன. முன்னாள் படைவீரா்கள் மற்றும் அலுவலா்கள், மத்திய, மாநில அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளர்கள் தங்குவதற்காக அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 30, 2024

தி.மலை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

செங்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள ஒராண்டு, இரண்டாண்டு பயிற்சிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. மேலும், என்ற இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 9499055873, 9499055872, 9443810040, 9597403476 என்ற கைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!