India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநங்கைகள் சாதனைகளை கௌரவிக்கும் முன்மாதிரி விருதிற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் (awards.tn.gov.in) பதிவு செய்யலாம். 2025-ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 10-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் உத்தரவின்படி, பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் தொகுப்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு, டோக்கன் விநியோகம் மூலம் தினமும் 300 பேருக்கு வழங்கப்படுகிறது. இதில், குறைபாடுகள் ஏதும் இருப்பின் 04175-233063 என்ற எண் அல்லது அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார். ஷேர் செய்யுங்கள்..
திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி தலைமையில் 62 பேரின் குடும்பங்களுக்கு சாலை விபத்து நிவாரணமாக மொத்தம் ரூ.60 லட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வந்தவாசியை அடுத்த மழையூர் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பவர் தனது நண்பர்களுடன் காரில் சேத்துப்பட்டை நோக்கி சென்ற போது, எட்டித்தாங்கல் கிராமம் அருகே நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் மீது கார் மோதாமல் இருக்க காரை திருப்பியபோது கார் நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (07.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிந்ததால் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, செங்கம், புதுப்பாளையம், கீழ் பென்னாத்தூர், கலசபாக்கம், ஜவ்வாது மலை, போளூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று தனி அலுவலராக திருவண்ணாமலை கோட்ட ஊராட்சி உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட ஊராட்சிக்கு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுக்கா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் சுமதி புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு ரூ.3,000 லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில், உதவி ஆய்வாளர் மதன்குமார், தலைமை காவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் மறைந்திருந்து கையும் களவுமாக அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வந்தவாசி வட்டம் நம்பேடு ஊராட்சியை சார்ந்த செல்வம் என்ற மாற்றுத்திறனாளி சிறு மற்றும் குறு தொழில் செய்ய உதவித்தொகை வழங்கக்கோரி இன்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்ததை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தன்விருப்ப நிதியில் இருந்து ரூ.50000 கசோலையாக வழங்கினார்.
திருவண்ணாமலையில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மாவட்டத்தில் 21,16,163 வாக்காளா்கள் உள்ளனா். இதில், பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலின்படி, புதிதாக 15,090 ஆண்கள், 19,850 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 4 பேர் என மொத்தம் 34,944 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். பட்டியலில் இருந்து மொத்தம் 13,380 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தி.மலை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2 ஏ முதன்மைத் தோ்வு எழுத தகுதி பெற்ற ஆதிதிராவிடா், பழங்குடியினா் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது, நடைபெற்ற குரூப்-2, குரூப்-2 ஏ முதல் நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவுகளை தாட்கோ மூலம் வழங்கப்படும்.
Sorry, no posts matched your criteria.