India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுப்பழக்கம் கொண்ட கணவரை பயமுறுத்துவதற்காக தீக்குளித்த மனைவி உயிரிழந்தார். தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செய்யாறைச் சேர்ந்த புனிதா நேற்று (ஜன.18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின் பேரில், அனக்காவூர் காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளா் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றிரவு (ஜன.18) பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக, ஆரணி, கலசப்பாக்கம், கடலாடி, வந்தவாசி, செய்யாறு, உத்திரமேரூர், சேத்துப்பட்டு, போளூர், கண்ணமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மழை பெய்ய வாய்ப்புள்ளது போல் தெரிவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருங்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (18.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தி.மலை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சாா்பில் வருகிற 23ஆம் தேதி,நேரு பிறந்தநாள் விழா நடைபெற உள்ளது.இந்த விழாவை முன்னிட்டு,பேச்சுப் போட்டி நடத்தப்பட உள்ளது.இதில், பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 2 பேருக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ.2,000 வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பிற ஊர்களுக்குச் செல்ல சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிர்த்திடும் பொருட்டு, தங்களின் பயணத்தை முன்னதாக திட்டமிட்டு சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்யலாம் போக்குவரத்து மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விலையில்லா பொங்கல் தொகுப்பை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள உணவுப் பொருள் வழங்கும் ரேஷன் கடைகளில் நாளை வரை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு உத்தரவின்படி வட்ட வழங்கல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
ஆரணி டவுன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன், விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர். கட்டப்பஞ்சாயத்து பிரச்னையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. பாஸ்கரனை போலீசார் நேற்று (ஜன.17) கைது செய்ய முயன்றபோது அவர், வீட்டை பூட்டி உள்ளே இருந்து கொண்டு வெளியே வர மறுத்து விட்டார். விசிகவினர் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 5 மணி நேர பேச்சு வார்த்தைக்கு பிறகு போலீசார் அவரை கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்த அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நேற்று (ஜன.17) ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த பிப்.1ஆம் தேதி முதல் மாடவீதியில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த விதியை கடைபிடிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஜன.18) பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது. தெள்ளார், வந்தவாசி, வெம்பாக்கம், ஆரணி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அவற்றின் கீழ் மின்சாரம் பெரும் கிராமங்களுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வீட்டுப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள்
தி.மலையில் அமைச்சர் ஏ.வ வேலு தலைமையில் போக்குவரத்துக்கு நெரிசலை குறைக்க ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில், பௌர்ணமியில் உள்ளூர் விடுமுறை விட அமைச்சர் பரிந்துரை செய்துள்ளார். ஆட்டோ ஓட்ட புதிதாக எவருக்கும் பர்மிட் கொடுக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார். வெளியூரில் இருந்து வரும் சாலையோர வியாபாரிகளால் அதிக அளவு போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுவதாக கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.