Tiruvannamalai

News January 22, 2025

தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு

image

துா்க்கை நம்மியந்தல் கிராமத்தைச் சோ்ந்த முருகன் (50) உள்ளிட்ட சிலர் கடந்த 16ஆம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி தெருவில் மாடுகளை விட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, தினேஷ் என்பவா் மீது மாடு முட்டியது. இதனால் இரு இடையே தகராறு ஏற்பட, மறுநாள் தினேஷ் தனது உறவினா்கள் உடன் சென்று அரிவாளால் முருகன் மற்றும் அவரது மகன் முரளியை வெட்டினர். பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

News January 21, 2025

தி.மலை: போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீஸ் 

image

திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் இருக்கும் வ.உ.சி நகர், பேகோபுர தெரு, மற்றும் மாந்தோப்பு பகுதி அருகே வாழும் மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு மக்கள் உடன்படாததால் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

News January 21, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மின்தடை

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஜன.21) பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாமண்டூர், மாங்கால், மாத்தூர், சோழவரம், செல்லப்பெரும்புலிமேடு, ஏழாச்சேரி, சுருட்டல், வடகல்பாக்கம், பாவூர், பூனைத்தாங்கல், சித்தலாப்பாக்கம், அப்துல்லாபுரம், தூசி, நரசங்கலம், சோதியம்பாக்கம், மேனல்லூர், தண்டராம்பட்டு, பெருங்களத்தூர், ராதாபுரம், சாத்தனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது.

News January 21, 2025

20 குடும்பங்களுக்கு வீடு வழங்கிய அமைச்சர்

image

மண் சரிவால் வீடுகளை இழந்த 20 குடும்பங்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு தனது சொந்த நிதியில் கட்டிய தற்காலிக வீடுகளை அவர்களிடம் ஒப்படைத்தார். கடந்த டிசம்பர் மாதம் பெய்த ஃபெஞ்சல் புயலால் திருவண்ணாமலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகர் பகுதியில் மண்சரிவு எற்பட்டது. இதில் பெரும் பாறைகள் உருண்டு வீட்டின் மேல் விழுந்ததில் 7 பேர் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

News January 21, 2025

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

திருவண்ணாமலையில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் ஜன.24ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். ஆட்சியரகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகிக்கிறாா். விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க உள்ளனர். ஷேர் பண்ணுங்க

News January 20, 2025

விஜயவாடாவைச் சேர்ந்த தொழிலதிபர் சாமி தரிசனம்

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விஜயவாடாவைச் சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவராவ் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் அணிந்திருந்த சுமார் 3 கிலோ தங்க நகைகளை மக்கள் வியப்புடன் பார்த்தனர். இவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இவர் எங்கு சென்றாலும் இவ்வாறு நகைகளை அணிந்து செல்வது குறிப்பிடத்தக்கது. உங்க கருத்து என்ன? கமெண்ட் பண்ணுங்க. 

News January 20, 2025

திருவண்ணாமலை: மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (20.01.2025) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது மனு அளிக்க வந்த பொதுமக்களை சந்தித்து அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர், அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

News January 20, 2025

தி.மலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தி.மலை மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி, ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறுகிறது. உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்’ என்ற தலைப்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஜன.25-ஆம் தேதி காலை 9 மணிக்கு பயிற்சி நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News January 20, 2025

தி.மலையில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

image

தி.மலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் அரியாலம், தச்சூர், களம்பூர், திருமணி, பெரியகொல்லப்பலூர், வேட்டவலம், மழவந்தாங்கல், கோனலூர், வீரபாண்டி, மதுரம்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க

News January 19, 2025

ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் 

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (19.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!