Tiruvannamalai

News February 6, 2025

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு 

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று (05.02.2025) செங்கம் வட்டம், மேல்பெண்ணாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, கர்ப்பிணிக்கு முறையாக மருத்துவம் பார்க்கப்படுகிறதா என சிகிச்சை குறித்து அர்யாகுஞ்சுர் ஊராட்சியை சார்ந்த கர்ப்பிணியிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்கள்.

News February 6, 2025

தி.மலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தி.மலை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப். 08 சனிக்கிழமை அன்று காலை 9 மணி – 2 மணி வரை செய்யாரில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News February 5, 2025

தி.மலை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

image

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது. இதில் நடப்பு நிதி ஆண்டின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News February 5, 2025

எந்தெந்த நாளில் கிரிவலம் சென்றால் பலன்?

image

ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவியும், திங்கட்கிழமை வலம் வந்தால் இந்திரலோக பதவியும் கிடைக்கும். செவ்வாய்க்கிழமை வலம் வந்தால் கடன், வறுமை விலகும். புதன்கிழமை வலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும், வியாழக்கிழமை வலம் வந்தால் ஞானமும், வெள்ளிக்கிழமை வலம் வந்தால் வைகுண்ட பதவியும் கிடைக்கப்பெறுவார்கள். சனிக்கிழமை அன்று வலம் வருவது பாவப்பிணிகளில் இருந்து மக்களை காக்கும். ஷேர் செய்யுங்கள்

News February 5, 2025

மத்திய அரசு நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்

image

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியரிங் டிரைய்னி – 150, மேற்பார்வையாளர் டிரைய்னி – 250 என மொத்தம் 400 பணியிடங்கள் உள்ளன. 27 வயது உடைய முதுகலை பட்டம் முடித்தவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்கலாம்<<>>. ஏப்ரல் 11, 12, 13 தேதிகளில் தேர்வு நடைபெறும். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News February 5, 2025

திருமணமான மறுநாளே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

image

செங்கம் அருகே உள்ள புதுப்பாலையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (29) திருமணமான மறுநாளே, வீட்டில் உள்ள மேல் மாடி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் அறையை திறந்து பார்த்ததும், சரவணன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த புதுப்பாலையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 4, 2025

தி.மலை காவல் உதவி ஆய்வாளர் சாதனை

image

அகில இந்திய அளவிலான விரல் ரேகை நிபுணருக்கான போட்டித் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஜெ.தேவிபிரியா கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராயிடம் சான்றிதழ் பெற்றார். இவருக்கு வாழ்த்து தெரிவிக்கலாமே. ஷேர் பண்ணுங்க. 

News February 4, 2025

கலசப்பாக்கம் ஆற்று திருவிழாவில் 6 அடி உயரமுள்ள வத்தி

image

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஆற்றுத் திருவிழாவில், அண்ணாமலையார் சமேத உண்ணாமலையம்மன் மற்றும் திருமா மூடிஸ்வரர் சமேத திரிபூர சுந்தரி சுவாமிகள் எழுந்தருளிய ஆற்றுத் திருவிழாவில், 6 அடி உயரமுள்ள அகண்ட ஜோதி அகர்பத்தி ஏற்றப்பட்டது. இதனால் அங்கு பக்தி மனம் வீசியது. இந்நிகழ்வில் 5000 க்கு மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஷேர் பண்ணுங்க. 

News February 4, 2025

சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது போலீசார் வழக்கு

image

ஆரணி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கப்படாததால் நேற்று அப்பகுதி மக்கள் திடீரென ஆரணி செய்யாறு சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News February 4, 2025

அதிகாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை

image

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தலைமையில், மக்களின் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. புதிய கலெக்டராக பதவி ஏற்ற அவர், 591 மனுக்களை பெற்றுக்கொண்டார். அவை கல்வி உதவித்தொகை, வங்கிக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டு பட்டா, வேலை வாய்ப்பு போன்ற கோரிக்கைகளாக இருந்தன. 30 நாட்களுக்கு மேல் மனுக்கள் நிலுவையில் வைக்கப்படக்கூடாது என அதிகாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.

error: Content is protected !!