India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் வேலுவின் வீட்டில் லலிதா வசித்து வந்தார். உடல்நலம் பாதிப்பால், நேற்று முந்னதனம் அதிகப்படியான மாத்திரைகள் எடுத்துள்ளார். இதனால் அவர் மயங்கி விழுந்தார். அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றதும், அவர் ஏற்கனவே உயிரிழந்தார் என தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலிசார் விசாரணை.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் பிப்.10 முதல் குடல்புழு நீக்கும் தேசிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பிப்.17ல் விடுபட்டவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்படும். 3,63,936 பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 2,127 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ ஊர்திகள், ஆசிரியர்கள், சுகாதார பணியாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், முன்னாள் இராணுவ வீரர்களுக்கான அங்காடி, அரசு மற்றும் தனியார் மதுபானக்கூடங்கள் ஆகியவற்றை எதிர்வரும் 11.02.2025 வள்ளலார் நினைவு நாளன்று மூடப்படவேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் சார்பில் அரசு அலுவலகங்களில் தாங்கள் கொடுக்கும் மனுக்கள் / கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு அலுவலர்கள் இலஞ்சம் கேட்டால் தயங்காமல் எங்களிடம் புகார் / தகவலை நேரிலோ கைபேசி வாயிலக தெரிவிக்கலாம்.மேலும் டிஎஸ்பி வேல்முருகன்-6369693803,இன்ஸ்பெக்டர் அருள்பிரசாத்-9442223011,இன்ஸ்பெக்டர் ஹேமாமாலினி 9498150600 அலுவலக தொலைபேசி-04175-232619 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் சார்பில் அரசு அலுவலகங்களில் தாங்கள் கொடுக்கும் மனுக்கள் / கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு அலுவலர்கள் இலஞ்சம் கேட்டால் தயங்காமல் எங்களிடம் புகார் / தகவலை நேரிலோ கைபேசி வாயிலக தெரிவிக்கலாம்.மேலும் டிஎஸ்பி வேல்முருகன்-6369693803,இன்ஸ்பெக்டர் அருள்பிரசாத்-9442223011,இன்ஸ்பெக்டர் ஹேமாமாலினி 9498150600 அலுவலக தொலைபேசி-04175-232619 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (07.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (07.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை 8/2/2025 காலை 9 மணி முதல் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. படித்த இளைஞர்கள் மற்றும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏறத்தாழ 120க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது. இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள் உண்டு. ஷேர் பண்ணுங்க.
தி.மலை காவல்துறை ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையின் அடிப்படையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தனிநபருடைய கடவுச்சொல், யூசர் நேம் போன்ற தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு வெளியிட்டு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்நபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சட்டச் சிக்கல்கள் நிறைந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பட்ஜெட் கூட்ட தொடரில், தொகுதி நலன் சார்ந்த சில கேள்விகளை மத்திய அரசை நோக்கி முன் வைத்தார். அதில், பள்ளிகளில் பெண்களின் வருகை ஊக்கப்படுத்துவதற்கும், கழிப்பறை வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரம், பாலின உணர்வுத்திறன் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பினார்.
Sorry, no posts matched your criteria.