India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், Multipurpose Hospital Worker, Staff Nurse பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000 மாத ஊதியமாக வழங்கப்படும். பிப்.21ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (11.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்தே பாரத் ரயில் சேவை வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார். மேலும் இந்த கோரிக்கைக்கு பதில் அளித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் துறை சார்ந்த அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்து சாத்திய கூறு இருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் பருவத மலைக்கு பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வரும் நிலையில் பிக் பாஸ் சீசன் 8ல் பங்குபெற்ற பவித்ரா ஜனனி மற்றும் ராயன் ஆகியோர் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு பருவதமலை ஏறி சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பவித்ரா பருவத மலைக்கு செல்ல வேண்டும் என கூறியது குறிப்பிடத்தக்கது.
2024-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு வழங்கும் பசுமை சாம்பியன் விருது தமிழக அளவில் 100 பேருக்கு வழங்கப்படவுள்ளது. விண்ணப்பங்கள், தி.மலை மாவட்டம் ஆட்சியர் அலுவலக இணையதளம் (https://tiruvannamalai.nic.in/) மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் கிடைக்கும். விண்ணப்பிக்க கடைசி நாள் 15.04.2025 என மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. பணியாளர்களுக்கு ரூ.21,700 – ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி, திறன், எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை செய்து தேர்வு செய்யப்படுவார்கள். <
சங்கராபுரத்தில் மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் திருவண்ணாமலை அடிஅண்ணாமலை பகுதியைச் சேர்ந்த 4 வயது ஸ்ரீதன்யா முதலாம் இடம் பெற்றார். விருது பெற்ற சிறுமியை பாஸ்கர் கௌரவித்தார். சந்தானம் சிலம்பம் அகாடமியின் 20 மாணவர்களில் 12 பேர் முதல் பரிசையும், 8 பேர் இரண்டாம் பரிசையும் பெற்றனர்.
நாவக்கரை பகுதியை சேர்ந்த ரூபன் (26), இன்ஸ்டாகிராமில் 20 வயது இளம்பெண்ணுக்கு காதல் வலை விரித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த 7ஆம் தேதி அங்குள்ள சுடுகாட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, தனது நண்பர் தனுஷ் (20) உடன் சேர்ந்து கட்டாயப்படுத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். போலீசார் நேற்று முன்தினம் இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் 10/02/2025 இன்று திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பாக தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்கள். உடன் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஈசான்ய மைதானத்தில் வருகின்ற பிப்ரவரி 14 முதல் பிப்ரவரி 24 வரை 100 புத்தக கதைகளுடன் 10 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெறும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்பக்கராஜ் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் மற்றும் புத்தக வாசிப்பாளர்கள் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.