India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை தொகுதி நல்லவன்பாளையம் ஊராட்சியில் இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகள் கட்டிவதற்கு இன்று(பிப்.13) அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய வீடுகள் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் பூமி பூஜை செய்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்ட பேரவையின் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி அடிக்கல் நாட்டினர்.
தன்டாரம்பட்டு, கீழ் ராவந்தவாடி கிராமத்தில் ராஜேந்திரன் (60) குடிசை வீட்டில் வசித்து வருகிறார். செங்கல் சூளையில் வேலை செய்பவர் ராஜேந்திரனின் பேத்தி ஜனனி (1½) பூச்சி மருந்து வைத்து இருக்கும் பெட்டியை குளிர்பானம் என எண்ணி குடித்தார். மயக்கமடைந்த சிறுமியை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவள் இறந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று (12.02.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணை தென்பெண்ணையாற்று படுகையில் மீனவர் கூட்டுறவு சங்கத்தை சார்ந்த பங்கு மீனவர்கள் அணையில் மீன் பிடிப்பது தொடர்பான அமைதி கூட்டம் நடைபெற்றது. இதில், அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14)<
கண்ணமங்கலம் அருகே உள்ள பாளைய ஏகாம்பரநல்லூரில் வசிப்பவர் ஏழுமலை. இவரது தாயார் பூங்காவனம் (74) என்பவர் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்திருந்தார். இந்த நிலையில் நேற்று காலை ஏழுமலை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் அவரது உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக கண்ணமங்கலம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அடையபலம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் சில்லறையில் மதுபான பாட்டில் விற்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அடையபலம் கிராமத்துக்கு விரைந்து சென்றனர். அங்குள்ள சுடுகாட்டுக்கு சென்றபோது மது விற்றவரை சுற்றி–வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் அதே ஊரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (44) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து 13 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் தென்பட்டாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் அல்லது 100 என்ற எண்ணை அழைத்து தங்களுடைய புகார்களை பதிவு செய்யலாம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணிக்கான பசுமை சாம்பியன் விருதுக்கு தகுதியுள்ள நபர்கள் ஏப்ரல்15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய www.tnpcb.gov.in இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
வெம்பாக்கம் தாலுகா பிரம்மதேசம் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பா.ம.கவை பற்றி அவதூறாக பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் அப்போதைய வெம்பாக்கம் பா.ம.க. ஒன்றிய செயலாளர் சுரேஷ் புகார் அளித்தார். இந்த வழக்கு தொடர்பாக இன்று சீமான் நேரில் ஆஜரானார்.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு. மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கும் 234 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் பொறியியலில் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள்<
Sorry, no posts matched your criteria.