India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (17.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதம் தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடை பெறுவது வழக்கம். அதன் அடிப்படையிலே இன்று திங்கள்கிழமை முன்னிட்டு மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் கலந்து கொண்டு மனுக்களை பெற்றார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி காயம் அடைந்த 13,600 நபர்களுக்கு 7.66 கோடியில் ‘இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48’ திட்டத்தின் கீழ் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்ற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும், சிகிச்சை முடிந்தும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஷேர் பண்ணுங்க.
தி.மலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ரூபாய் ஒரு கோடி வரை கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடன் பெற விரும்புவோர் www.exwel.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் மாவட்ட நல வாரிய அலுவலகத்தில் விளக்கம் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
தி.மலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் உதவித்தொகை கோரி பிப்.28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தில் வருவாய் துறையில் வருவாய் ஆய்வாளர் (அ) அதற்கு மேற்பட்ட அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்று, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அடையாள அட்டை, கல்வி சான்றுகளின் அசல், நகல்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். <
நெய்வாநத்தம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி இந்திரா (வயது 49). இந்திரா கடந்த ஒரு வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். கடந்த 14 தேதி மாட்டை கட்டி விட்டு வருகிறேன் என்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர்.பின்னர் வீடு திரும்பவில்லை. நேற்று விவசாய நிலத்தின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (16.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணிக்காக விளையாடுவதற்கு தி.மலை மாவட்டம் எடத்தனூர் கிராமத்தைச் சார்ந்த தினேஷ் என்ற இளைஞர் தேர்வாகியுள்ளார். இவருக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள், சிறந்த முறையில் கிரிக்கெட் விளையாடி இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாமும் வாழ்த்துவோமே!. ஷேர் பண்ணுங்க.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை<
Sorry, no posts matched your criteria.