India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன.24 வயது நிறைந்திருக்க வேண்டும்.10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். <
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 46 வயது பெண் ஜனவரியில் ஆன்மிக பயணமாக தி.மலை வந்தார்.கடந்த 17ம் தேதி வெங்கடேசன் (30) என்பவர் அவரிடம் மேலே உள்ள ஒரு குகையில் அமர்ந்து தியானம் செய்தால் முக்தி கிடைக்கும் என கூறி அழைத்துச் சென்றார்.கஞ்சா போதையில் இருந்த அவர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தப்பினார்.அப்பெண் பிரான்ஸ் நாட்டு துாதரகத்திற்கு தெரிவித்ததை அடுத்து திருவண்ணாமலை போலீசார் வெங்கடேசனை கைது செய்தனர்
தி.மலை, செய்யாறு அடுத்த வெம்பாக்கத்தை சேர்ந்தவர் வினோத் குமார். காஷ்மீரில் 62வது படை தளத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்தார். கடந்த 18ம் தேதி காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில், வலது மார்பில் குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று சொந்த ஊரான வெம்பாக்கம் கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
தி.மலை மாவட்டம் இஞ்சிமேடு பகுதியில் மணிச்சேறை உடையார் கோயில் அமைந்துள்ளது. நவபாஷாண லிங்கமாக அருள் பாலிக்கும் சிவபெருமானுக்கு பெரியமலையில் உள்ள சுனை தீர்த்தத்தை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் நோய்கள் குணமாகிறது. அத்துடன் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த தீர்த்தத்தை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க
வெம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜீவகன் ஓய்வு பெற்ற போலீஸ். இவரது மகன் வினோத்குமார் (49). காஷ்மீர் பகுதியில் 62வது படைத்தளத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார்.காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்தார்.அவரது உடல் வெம்பாக்கத்தில் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.இறந்த ராணுவ வீரருக்கு மாலை அணிவித்து 21 குண்டுகள் முழங்கவீர வணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக் குழுக்கள் தேர்வு மார்ச் – 22,23 ஆகிய 2 தினங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது திருவண்ணாமலை மாவட்டத்திற்கான பொறுப்பாளர் தே.அருள், 8667399314 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு பதிவு செய்துக் கொள்ளலாம்.
தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் வரும் மார்ச் 21 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது. 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் கலந்து கொள்வோர்கள் <
செய்யாறு அடுத்த வெம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜீவகன் ஓய்வு பெற்ற போலீஸ். இவரது மகன் வினோத்குமார் (49) காஷ்மீர் பகுதியில் 62வது படைத்தளத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். கடந்த 18ம் தேதி மாலை 3.49 மணியளவில் காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் இவரின் வலது மார்பு அருகே தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வீரமரணம் அடைந்தார்.
செய்யாறை அடுத்த பூதேரிபுல்லவாக்கத்தை சேர்ந்தவர் கண்ணன் (29). இவர் கவிதா (21) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு 7 மாதத்தில் அபிஷேக் என்ற மகன் உள்ளார்.இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி வீட்டிலிருந்த கவிதா, விஷம் குடித்து மயங்கி உள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின் கவிதா உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (19.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.