India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கியுள்ள புலம் பெயா்ந்த தொழிலாளா்கள், புதிதாக மின்னணு குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் வெளி மாநிலத்தவா் தங்களது சொந்த மாநிலத்தில் மின்னணு குடும்ப அட்டை வைத்திருக்கக் கூடாது விண்ணப்பத்தின் நிலையை இணையதளம் அல்லது சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
திருவண்ணாமலை திருக்கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் திருநங்கைகள் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை சமூக நலத்துறை அலுவலர்கள் திருநங்கைகளுக்கு அறிவுரைக்கூட்டம் நடத்தி தெரிவிக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழாவினை முன்னிட்டு திமுகவினர் வீடுகள் தோறும் திமுக இரு வண்ணக் கொடியை பறக்கவிட வேண்டும் என்ற திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை இன்று (செப்.15) தனது இல்லத்தில் திமுக இரு வண்ணக் கொடியினை ஏற்றினார். இந்நிகழ்வில், திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் பேரில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாத வழக்குகள் நேற்று தீர்வு காணப்பட்டன. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1157 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூபாய் 10.54 கோடிக்கு தீர்வு காணப்பட்டன
திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் லண்டன் பிரிட்ஜ் மற்றும் மலேசியன் ட்வின் டவர் வடிவிலான பொழுதுபோக்கு பொருட்காட்சியினை மாநகராட்சி மேயர் நிர்மலாவேல்மாறன் குத்துவிளக்கேற்றி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் டிஎன்பிசி குரூப் 2 மற்றும் 2ஏ போட்டித் தேர்வுக்கான 73 மையங்களில் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 21666 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் நேற்று 5132 பேர் தேர்வு எழுதவில்லை, 16,484 பேர் மட்டுமே பங்கேற்றனர். மாவட்ட ஆட்சித் தலைவர் தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
போளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நாளை திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை இரண்டு நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை விடப்பட்ட இரண்டு நாட்களும் அடுத்த மாதம் இரண்டாம் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு, தாட்கோ மூலம் யு.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 21-36 வயதுக்குள் உள்ளவர்கள் தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். 100 மாணவர்களுக்கு ஓராண்டு பயிற்சி, விடுதி வசதி, பயிற்சி செலவினம் தாட்கோவால் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியை பரப்புவதோ, வாங்க மறுப்பதோ சட்டப்படி குற்றம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. 10 ரூபாய் நாணயங்கள் சட்டப்பூர்வமாக செல்லும் என்பதால், பொதுமக்களைத் தவறாகத் திசைதிருப்பாமல் கடை உரிமையாளர்கள் அந்த நாணயங்களை எல்லா பரிவர்த்தனைகளிலும் ஏற்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி செப்டம்பர் 17-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11:27 மணிக்கு தொடங்கி மறுநாள் செப்டம்பர் 18-ஆம் தேதி புதன்கிழமை காலை 9.10 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரங்களில் கிரிவலம் வர உகந்த நேரம் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.