Tiruvannamalai

News September 19, 2024

கண்ணமங்கலம் அருகே பெண் சிவனடியார் கொலை

image

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஏரிக்கரையில் இன்று காலை பெண் சிவனடியார் ஒருவர் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்ததை கண்டு பொதுமக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் போலீசார் சம்பவம் இடம் விரைந்து அவரின் உடலை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News September 19, 2024

சிறுமிகளின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்

image

ஆரணி அருகே ஏரியில் மூழ்கி பலியான 4 குழந்தைகளின் உடல்களுக்கு கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் கிராம மக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினர். தி.மு.க.சார்பில் தலா ரூ.1 லட்சம் என ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது. அமைச்சர் எ.வ.வேலு உத்தரவின்பேரில் தி.மு.க.சார்பில் 4 குழந்தைகளுக்கும் நிவாரண உதவியாக தலா ரூ.1 லட்சம் வீதம் பெற்றோர்களிடம் வழங்கி எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.ஆறுதல் கூறினார்.

News September 19, 2024

தி.மலையில் செவிலியர்கள் முற்றுகை போராட்டம்

image

தி.மலை மருத்துவக் கல்லூரியில் சமீபத்தில் ரூ.15,000 லஞ்சம் வாங்கி கொண்டு செவிலியர் பிரசவம் பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சுமார் 150 செவிலியர்களை வேறு பிரிவுக்கு பணி மாற்றம் செய்ய போவதாக சர்ச்சை எழுந்தது. குற்றச்சாட்டு குறித்து துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி செவிலியர்கள் கல்லூரி முதல்வர் அறை முன்பு இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News September 19, 2024

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்டம்

image

தி.மலை கிரிவலத்திற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. விழுப்புரத்தில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் வந்தடைந்தனர். இதில், பயணிகள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டும், முண்டியடித்து கொண்டும் ரயிலில் ஏறினர். மேலும், ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

News September 19, 2024

செய்யாறில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

image

செய்யாறு தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற ‘செய்யாறு உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் பல்வேறு துறை சார்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு வழங்கினார். செய்யாறு எம்.எல்.ஏ ஜோதி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வருவாய் துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News September 18, 2024

தி. மலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள் சாலை மறியல்

image

திருவண்ணாமலையில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கிரிவலம் சென்ற பக்தர்கள் வீடு திரும்ப போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் திருவண்ணாமலை-வேலூர் திருக்கோவிலூர்-திண்டிவனம் ஆகிய சாலைகளில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, போலீசார் பக்தர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News September 18, 2024

தி. மலையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

image

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற செப் 20-ந் தேதி கலெக்டர் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொதுக் கோரிக்கைகளை கூட்டத்–தில் தெரிவித்தும், தனி நபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயன் பெறலாம். இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News September 18, 2024

திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம்

image

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் புதன்கிழமை வரை பல லட்சம் பக்தர்கள் 14 கி.மீ. கிரிவலம் வந்தனர். அதிக பக்தர்கள் மற்றும் வெயிலின் காரணமாக நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டு, 5-6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட்டன.

News September 18, 2024

தி.மலை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

தி.மலை மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் விவசாயம் மற்றும் தனிநபர் பணிகளான பண்ணைக் குட்டைகள், மண், கல் வரப்பு அமைத்தல், தோட்டக்கலை செடிகள் நாற்றங்கால் அமைப்பது ஆகிய பணிகளில் ஈடுபட விரும்பும் நபர்கள் தேவையான ஆவணங்களுடன் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News September 17, 2024

ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் பலி

image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அடையபுலம் கிராமத்தில் ஓடைதாங்கல் ஏரியில் உள்ளது. இந்த ஏரியில் இன்று 2 குடும்பங்களை சேர்ந்த மோகன்ராஜ் (13), வர்ஷா (9), கார்திகா (8) மற்றும் தானிஷ்கா (4) ஆகிய குழந்தைகள் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.