Tiruvannamalai

News September 25, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (25.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News September 25, 2024

காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

image

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை கூறியிருந்தது. இதற்கு திருவண்ணாமலையில் ஆசிரியர் சங்கம் அக்டோபர் 7ம் தேதி வரை விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. அதனை ஏற்று அக்டோபர் 6ஆம் தேதி வரை விடுமுறை அளித்து, பள்ளி திறப்பு 7ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

News September 25, 2024

செங்கம் அருகே 3 பேர் போக்சோவில் கைது

image

செங்கம் அருகே 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனா். சங்கம் பனை ஓலைப்பட்டியில் 15 வயது சிறுமி பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். அங்கு அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் செங்கம் மகளிர் போலீசார் 3 பேர் மீது போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

News September 25, 2024

சுயதொழில் தொடங்க கடனுதவி

image

தமிழகத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க விரும்பும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், படைப்பணியின் போது மரணமடைந்த படைவீரா்களின் கைம்பெண்கள் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அணுகி விருப்பங்களை அக்.10-ஆம் தேதிக்குள் அளிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

News September 24, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (24.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News September 24, 2024

தி.மலையில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.

News September 24, 2024

தி.மலை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்

image

மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு வேலையில்லா கால நிவாரணம், பேட்டரி வாகனங்கள் வழங்குதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

News September 24, 2024

போளூரில் லஞ்ச ஒழிப்பு துறையினரின் எண்கள் அழிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அமைந்துள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் எண்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதி வைத்திருந்தினர். ஆனால், மக்கள் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்க கூடாது என்பதற்காக அந்த தொலைபேசி எண்களை பெயிண்டால் அழித்துள்ளனர்.

News September 24, 2024

கோ – ஆப்டெக்ஸின் தீபாவளி விற்பனை துவக்க விழா

image

திருவண்ணாமலையில் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் நடத்தும் கோ – ஆப்டெக்ஸின் தீபாவளி விற்பனை துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு குத்து விளக்கினை ஏற்றி துவக்கி வைத்தார். அனைவரும் கைத்தறி ஆடைகளை பயன்படுத்தி நெசவாளர்களுக்கு உதவிடுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இவ்விழாவில், மாவட்ட கைத்தறி உதவி இயக்குனர், கோ அப் டெக்ஸ் மேலாளர், ஊழியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News September 24, 2024

மாற்று இடத்தில் பட்டா வழங்கக் கோரி 300 போ் மனு

image

தி.மலை மாநகராட்சியில் 300க்கும் மேற்பட்டோர், தங்களின் வீடுகள் நீர்நிலை புறம்போக்கில் அமைந்ததாக கூறி இடம் காலி செய்ய அறிவிப்பு வழங்கியதால், மாற்று இடத்தில் பட்டா வழங்கக் கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இவர்கள் பல ஆண்டுகளாக வீட்டு வரி, மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளனர். தற்போது, இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டத் திட்டமிடப்பட்ட இடத்தில் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.