Tiruvannamalai

News April 30, 2024

தி.மலையில் இருந்து புதிய பேருந்து வழித்தடம்

image

திருவண்ணாமலை To கம்பம் வரை புதிய பேருந்து வழித்தடம் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து வழித்தடம் திருவண்ணாமலையில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி, திண்டுக்கல், தேனி வழியாக காலை 4 மணிக்கு கம்பம் சென்றடையும் என போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

News April 30, 2024

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!

image

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

News April 30, 2024

இன்று முதல் அதிரடி தடை

image

நாடாளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம், சண்முகா தொழில்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளை சுற்றி
ஒரு கி.மீ. தொலைவிற்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்தும், தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

News April 30, 2024

அஞ்சல் வாக்குகள் அனுப்பும் பணி தீவிரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் செலுத்தப்பட்ட அஞ்சல் வாக்குகளை தொகுதி வாரியாக பிரித்து திருச்சி மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு மையத்திற்கு அனுப்பும் பணியினை அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முன்னிலையில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று (29.04.2024) நடைபெற்றது.

News April 29, 2024

 வந்தவாசி: லட்சுமி நரசிம்மர் மகா தேரோட்டம் 

image

வந்தவாசி அடுத்த ஆவணியாபரம் கிராமத்தில் சிம்ம மலை மீது அமர்ந்திருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலய சித்திரை மாத பிரம்மோற்சவ விழா  தேரோட்டம் இன்று நடைபெற்றது. சேத்துப்பட்டு அவனியாபுரம், கொழப்பலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சிம்ம மலையை சுற்றி வந்தனர்.   

News April 29, 2024

தி.மலை: 3 பேர் பலியான சோகம்

image

தி.மலை மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே பிச்சாநத்தத்தை சேர்ந்த பவித்ரா (30). மகன் ரித்திக் (9), மகள் நித்திகா (7) ஆகிய மூவரும் விடுமுறைக்காக சென்னையில் இருந்து ஒடுக்கத்தூர் வந்தனர். விவசாய கிணற்றில் இன்று நீச்சல் கற்றுக் கொண்டிருந்தபோது மூவரும் நீரில் மூழ்கி பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

News April 29, 2024

பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் செண்பகத்தோப்பு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், இன்று (29.04.2024) மலர்த்தூவி திறந்து வைத்தார். மற்றும் உடன் ஏராளமான அரசு அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

News April 29, 2024

தி.மலை: 2329 காலி பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளில் 2329 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பம்போல் எதாவது ஒரு மாவட்டத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அதன்படி திருவண்ணாமலை மாவட்ட நீதித்துறையில் 97 காலியிடங்கள் உள்ளன. இதில் விண்ணப்பிக்க<> https.//www.mhc.tn.gov.in<<>> என்ற இணைய தளத்தில் மே.27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 29, 2024

ரயில்வே நிர்வாகம் கட்டணத்தை வெளியிட்டது

image

திருவண்ணாமலை சென்னை கடற்கரையிலிருந்து திருவண்ணாமலைக்கு மே 2 ஆம் தேதி முதல் தினசரி ரயில் சேவை தொடங்க உள்ள நிலையில் நேர பட்டியலையும் மற்றும் பயணக் கட்டணமாக ரூ.50 நிர்ணயித்து தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதனால் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வரும் சென்னை நகரத்து பக்தர்கள், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

News April 29, 2024

சிறுமி கர்ப்பம் போக்சோவில் கைது

image

வந்தவாசி பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் தனது உறவினரின் குழந்தையான 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில்,சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், வந்தவாசி மகளிர் போலீசார் தேவேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!