Tiruvannamalai

News January 6, 2026

தி.மலையில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

தி.மலையில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <>க்ளிக்<<>> செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

News January 6, 2026

தி.மலை: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

image

தி.மலை மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து பதிவு செய்யுங்கள். ஷேர்!

News January 6, 2026

BREAKING: தி.மலையில் மழை வெளுக்கும்!

image

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் ஜன.10 மற்றும் ஜன.11ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே ஜன.10க்கு மேல் மழையை எதிர்பார்க்கலாம். ஷேர் பண்ணுங்க.

News January 6, 2026

தி.மலை பயணிகளுக்கு முக்கிய தகவல்

image

தி.மலை மக்களே பண்டிகை காலம் வருவதால் பலரும் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பீர்கள். ரயிலில் பயணம் செய்யும் போது laptop, phone, luggage போன்றவற்றை தவறவிட்டால் பதற்றம் வேண்டாம். <>இங்கே <<>>கிளிக் செய்து மத்திய அரசின் appஐ டவுன்லோட் செய்யுங்கள். அதில் நீங்கள் பயணித்த ரயில் எண், எந்த நிலையத்தில் இறங்குநீர்கள் போன்ற அடிப்படை விவரத்தை பதிவிட்டால் போதும். சிம்பிள், உங்கள் பொருள் வந்து சேரும். SHARE IT

News January 6, 2026

தி.மலை: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

தி.மலை மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

தி.மலை: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

தி.மலை மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

தி.மலை அருகே பூட்டிய வண்டிக்கும் ஆப்பு!

image

திருவண்ணாமலை, தண்டராம்பட்டு பகுதியில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி காணாமல் போவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில், காவல் ஆய்வாளர் பொன்ராஜன் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சல்மான் (29) & திருவடத்தனூரை சேர்ந்த முன்னா கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 15-க்கும் மேற்பட்ட டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

News January 6, 2026

தி.மலை: Spam Calls-க்கு இனி ‘End Card ‘!

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் திருவண்ணாமலை மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம், 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News January 6, 2026

தி.மலையில் சோகம்; மரணத்தின் பிடியில் ஒரு நொடி!

image

வந்தவாசியை அடுத்த தேசூரைச் சோ்ந்தவா் சீனுவாசன் (48). தனியாா் பேருந்து ஓட்டுநரான இவா், இதே ஊரைச் சோ்ந்த நண்பா் பெருமாளுடன் (46) பைக்கில் செய்யாற்றுக்கு சென்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.வந்தவாசி – சேத்துப்பட்டு சாலை, மழையூா் கூட்டுச் சாலை அருகே செல்லும்போது பைக் நிலைதடுமாறி நொடி பொழுதில் விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சீனுவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா்.

News January 6, 2026

தி.மலை: தம்பதியர் எரித்து கொலை; முதல் கணவர் கைது

image

செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் ஏரிக்கரை பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சக்திவேல் (55) மற்றும் அவரது 2வது மனைவி அமிர்தம் (45) ஆகியோர் குடிசை வீட்டில் தூங்கிய போது மர்ம நபர்கள் குடிசை வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி தீ வைத்தனர். இந்நிலையில், தன்னுடன் குடும்பம் நடத்த வரமறுத்ததால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் முதல் கணவர் இருவரை உயிரோடு எரித்துள்ளார். போலீசார் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!