India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 76 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் நேற்று வழங்கினாா். தி.மலை மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கைகள், திருநம்பிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தி.மலை, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தி.மலை விவகார எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கரும்பை ஆலைக்கு பதிவு செய்யாமல் உள்ளனர். எனவே, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் விவகார எல்லை பகுதிகளில் 2024-25 ஆண்டிற்கான கரும்பு சாகுபடி செய்ய இதுவரை ஆலைக்கு பதிவு செய்யாத விவசாயிகள் வரும் 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.
தி.மலை மாவட்டம், போளூர் கொம்மனந்தல் கிராமம் தரணி சர்க்கரைஆலை சில ஆண்டுகளாக செயல்படாமல் மூடப்பட்டிருந்தது. மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தி.மலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. விவசாயிகள் ஆலை நிர்வாகத்துடன் இணைந்து கரும்பு நடுவது, அறுவடை செய்வது, ஆலைக்கு கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட தேவையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் என 38 போலீசார் போளூர், செங்கம், மற்றும் செய்யாறு பகுதியில் உள்ள மதுவிலக்கு, சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் என மொத்தம் 60 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் முடிந்து காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி. கார்த்திகேயன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் இன்று (ஜூன்26) நடைபெற்றது. இம்முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி. காா்த்திகேயன் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்று விசாரணை மேற்கொண்டாா்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உணவு, தங்குமிடம், மாதம் ரூ.4 ஆயிரத்துடன் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் மூன்றாண்டுக்கான சான்றிதழ் படிப்பில் மாணவர்கள் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி ஜூலை 19 மாலை 05.00 மணி. விண்ணப்ப படிவங்களை திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். வயது வரம்பு 13 வயது முதல் அதிகபட்சம் 20 வயதிற்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆனி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. கோயில் உண்டியலில் ரூ.2 கோடியே 57 லட்சத்து 98 ஆயிரத்து 914ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 181 கிராம் தங்கம், 1465 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இவை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.1,055 கோடியில் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படும் என்று திருவண்ணாமலை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு நேற்று சட்டபேரவையில் அறிவித்தார். மேலும் திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையத்தருகிலும் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் திருவண்ணாமலையில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான பயிற்சியாளர்களுக்கான இரண்டாம் பருவ இறுதித் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது.தொடர்ந்து ஜூன் 28-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வை 104 பயிற்சியாளர்கள் எழுதுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் இன்று புதன்கிழமை போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. உறுதிமொழி எடுத்ததற்கான சான்றிதழை அந்த வளைதளத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.