Tiruvannamalai

News January 8, 2026

தி.மலை பெண்களே…, இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

image

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்- 1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். (SHARE IT)

News January 8, 2026

தி.மலை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 8, 2026

தி.மலை மக்களுக்கு பொங்கல் பரிசு !

image

திருவண்ணாமலை: கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்டவலம் அடுத்த கீரனூர் ஊராட்சி ராஜபாளையம் கிராமத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ள தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தை மாத பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான கூப்பன், ரேஷன் கடை கூட்டுறவு விற்பனையாளரால் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் முறைகேடு நடந்தால் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம்.

News January 8, 2026

தி.மலை: இனி பொங்கலுக்கு ஊருக்கு செல்வது ஈசி! CLICK

image

தி.மலை மாவட்ட மக்களே.., வரும் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல, உறவினர்களை பார்க்கச் செல்ல டிக்கேட் போடலையா..? கவலை வேண்டாம்! ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்தும் பயணிக்க வேண்டாம்! உடனடியாக <>இங்கே <<>>கிளிக் செய்து, நீங்கள் செல்லும் ஊருக்கு மிக மலிவு விலையில் AC Sleeper பேருந்தில் டிக்கெட் எடுக்கலாம். அல்லது 9444018898 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப்பில் ‘hi’ அனுப்பவும். இந்தத் தகவலை உடனே SHARE!

News January 8, 2026

தி.மலையில் தேர்தலை புறக்கணிக்க முடிவு!

image

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி விசைப்பம்பு இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் நேற்று(ஜன.7) நடைபெற்றது. இதில், தூய்மைக் காவலர்களுக்கு பொங்கல் கருணைத் தொகை ரூ.1,000, நிலவையில் உள்ள மாத ஊதியம், ரூ.25,000 மேல் காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லையெனில் நோட்டாவிற்கு வாக்களிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News January 8, 2026

தி.மலையில் மலிவு விலையில் பைக், கார் வேண்டுமா..?

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலூர் சரக போதைப்பொருள் ஒழிப்புக் குழுவால் பறிமுதல் செய்யப்பட்ட 1 நான்கு சக்கர வாகனம், 1 ஆட்டோ, 18 இருசக்கர வாகனங்கள் என 20 வாகனங்கள் வருகிற ஜன.12 அன்று ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்படுகின்றன. காலை 8 முதல் 12 மணி வரை பார்வையிட்டு, இருசக்கர வாகனத்திற்கு ரூ.5,000, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10,000 முன்பணம் செலுத்தி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் ஏலத்தில் பங்கேற்கலாம்.

News January 8, 2026

தி.மலை: மேஜிக் செய்வதாக கூறி நகைகள் அபேஸ்!

image

ஆரணி, தண்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த குப்பு (83) என்பவரிடம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், வீட்டுப் பிரச்சனையை தீர்க்க மேஜிக் செய்வதாக கூறியுள்ளார். அவரிடம் இருந்த 2 மூக்குத்திகளை வாங்கி கொண்டு, அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

News January 8, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண அட்டை

image

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 2026ஆம் ஆண்டிற்கான இலவச பயண அட்டை ஆன்லைன் வழியாக வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். நேற்று(ஜன.7) முதல் ஜன.31 வரை அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து சிறப்பு முகாம் நடைபெறும். தேவையான ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயனடைய மாற்றுத்திறனாளிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

News January 8, 2026

தி.மலையில் துடிதுடித்து பலி!

image

தி.மலை: வந்தவாசியை அடுத்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(32). இவர், சென்னை, ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். இந்நிலையில், உத்திரமேரூரில் அடகு வைத்த நகையை மீட்கச் சென்ற போது, வெங்கமேடு பகுதியில், தடுமாறி கீழே விழுந்து, படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது, ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

News January 8, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜன.7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!