India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பருவதமலை, கடலாடி தென்மகாதேவமங்கலம் கிராமங்களையொட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலையாகும். இந்த மலை நவிரமலை, தென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை என்று அழைக்கப்படுகிறது. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இந்த மலையின்மேல் அமைந்துள்ள மல்லிகார்ஜுனர் கோயில் கிபி 3ஆம் நூற்றாண்டில் குறுநிலமன்னனான நன்னன் கட்டியதாக இக்கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது.
தி.மலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழே இயங்கும் தி.மலை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள பயிற்சியாளர் பணியிடங்களில் நிரப்ப இணையதளம்(www. skilltraining.tn.gov.in) வாயிலாக 7-6-2024 வரை விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி 8 வகுப்பு மற்றும் 10 வகுப்பு. 1 ஆண்டு மற்றும் 2 ஆண்டு தொழிற்பிரிவுகள். தகவலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
போளூர் அடுத்த மட்டைபிறையூர் பகுதியில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் நிற்காமல் சென்ற 3 இளைஞர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிரதீப் (20), சந்துரு (20), ராஜாராம் (37) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடமிருந்து சுமார் பத்து சவரன் நகை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள இரும்புலி மலை கிராமப் பகுதியில் நேற்று தரையிறங்கிய 2 ஹெலிகாப்டர்களால் மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
கண்ணமங்கலத்தை அடுத்த இரும்புலி மலைக் கிராமத்தில் நேற்று பிற்பகலில் இரு ஹெலிகாப்டர்கள் தரையிறக்கப்பட்டு அவற்றில் இருந்து ஆள்கள் இறங்கினா்.
இதைப் பாா்த்த அப்பகுதி மலைவாழ் மக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
திருவண்ணாமலையிலிருந்து கள்ளகுறிச்சி வரை நான்கு வழி சாலை விரிவாக்க பணி தற்போது நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட எல்லையான வாழவச்சனூரில் இப்பணிகள் நடக்கிறது. இப்பகுதியில் இருபுறமும் கால்வாய் அமைக்காமல் சாலை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் இரு புறமும் கால்வாய் அமைத்து தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை வந்தவாசி பழவேரி கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்ற இளைஞர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியுள்ளார் . பின்னர் திருமணம் செய்துகொள்வதாக கூறி சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வந்தவாசி போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து இளைஞரை தேடி வருகின்றனர்.
செய்யாறு நகர வீதிகளில் நெற்றியில் கொம்பு முளைத்த அதிசய மாடு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது. அதனை ஏராளமான மக்கள் வியப்புடன் பார்த்தனர். பின்னர் வாழைப்பழம் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி மாட்டை தொட்டு வணங்கி சென்றனர். மேலும் ஏராளமானோர் அதிசய மாட்டுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
திருவண்ணாமலை நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த சாத்தனூர் அணை 1958 இல் காமராஜர் அவர்களால் கட்டப்பட்டது. இந்த அணை சென்னகேசவ மலைகளுக்கு இடையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும். இங்கு அழகிய பூங்காவும், ஆசியா கண்டத்தில் மிகப்பெரிய முதலைப்பண்ணையும் உள்ளது. இதன் கொள்ளளவு 7321 மில்லியன் கன அடிகள். மேலும், முழு அளவு 119 அடி உயரம் கொண்டதாகும்.
தி.மலை மாவட்டம் செங்கோட்டை அடுத்த அனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன். கட்டிட தொழிலாளி. நேற்று மாலை வேலை முடித்துவிட்டு அனாதிமங்கலம் செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போளூர் அடுத்த கேளூர் சந்தைமேட்டில் வாரந்தோறும் சனிக்கிழமை மாட்டுச்சந்தை மற்றும் காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான காளைமாடுகள், கன்றுகள் விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.