Tiruvannamalai

News May 29, 2024

திருவண்ணாமலையின் ஜவ்வாது மலை சிறப்பு!

image

கிழக்குத்தொடர்ச்சி மலையின் அங்கமான ஜவ்வாது மலை 260 ச.கி.மீ பரப்பளவு கொண்டது. மலையாளிகள் என்னும் பழங்குடியினர் இங்கு அதிகம் வசிக்கின்றனர். 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் இங்கு உள்ளன. இம்மலையிலுள்ள பாதிரி என்ற ஊரில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த தடயங்களும், கீழ்செப்பிளி, மண்டபாறை ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் உள்ளன. இங்கு சோழர்கால சிவன் கோவிலும், பவ்வேறு கால நடுகற்களும் கிடைக்கப் பெற்றன.

News May 29, 2024

வந்தவாசி: உயிரை பறித்த மாங்காய்

image

வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் நேற்று மாங்கா மரத்தில் ஏறி மாங்காய் பதித்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மாசிலாமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்காெண்டனர் .

News May 28, 2024

தி.மலை வரும் முக்கிய பிரபலம்

image

தி.மலை SKP கல்வி குழும வளாகத்தில் வரும் ஜூன் 1ஆம் தேதி மாபெரும் ஓவியம் நடனம் பாடல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. 1முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொள்கின்றனர்.  சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ் ஈரோடு மகேஷ் கலந்துகொண்டு பரிசுகள் வழங்குகிறார்.

News May 28, 2024

மருந்து சாப்பிட்ட 10 மாடுகள் பலி

image

வந்தவாசி அடுத்த பொன்னூர் மலைப்பகுதியில் காட்டு பன்றிகளை வேட்டையாட வைத்திருந்த வெடிபொருட்களை அந்தப் பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த பத்திற்கும் மேற்பட்ட மாடுகள் வெடி மருந்துகளை சாப்பிட்டதால் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பலியானது. இதுகுறித்து மாட்டின் உரிமையாளர்கள் பொன்னூர் காவல் நிலையத்திலும் வனத்துறையினரிடமும் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பொன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 28, 2024

அண்ணாமலையாருக்கு1008 கலச அபிஷேகம்

image

தி.மலை அருள்மிகு ஶ்ரீ அண்ணாமலையார் திருக்கோவில் அக்னி தோஷ நிவர்த்தி இன்று (28.05.2024) நான்காம் கால யாக பூஜை நிறைவுபெற்று கடம் புறப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் மூலவருக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாக சாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட கலசங்கள் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News May 28, 2024

உலக பட்டினி தினத்தில் அன்னதானம்

image

திருவண்ணாமலையில் உலக பட்டினி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி, ஏழை, எளிய மக்களுக்கு மாவட்ட தலைவர் பாரதிதாசன் அன்னதானம் வழங்கினார். இதில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News May 28, 2024

ஆரணி அருகே மேஸ்திரி படுகொலை

image

திருவண்ணாமலை மாவட்டம் அரணி பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் பாஸ்கரன், வெங்கடேசன். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே பாகப்பிரிவினை காரணமக தகராறு இருந்து வந்துள்ளது. போதையில் இருவரும் சண்டையிட்டுக் கொண்டதில் அண்ணன் பாஸ்கரன் தலையில் தம்பி வெங்கடேசன் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். வெங்கடேசனை போலீசார் இன்று கைது செய்தி விசாரணை நடத்தி வருகின்றனர்,

News May 28, 2024

சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரம்

image

திருவண்ணாமலை-விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை கீழ்நாத்தூர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலையை விரிவுபடுத்தும் நோக்கில் சாலையோர புளிய மரங்கள் அகற்றப்பட்டு பக்க கால் வாய்க்கால் அமைக்கப்பட்டன. தற்போது அப்பகுதியில் சாலையை அகலப்படுத்த ஜேசிபி எந்திரங்கள் கொண்டு சாலையோரம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News May 27, 2024

நுங்கு விற்பனை ஜோர்

image

திருவண்ணாமலை பகுதியில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் உஷ்ணத்தை தணிக்க பொதுமக்கள் பனை நுங்கு விரும்பி வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் நுங்கு எங்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதை கண்டறிந்து தேடிப்பிடித்து பொதுமக்கள் வாங்கிச் செல்வதை காணமுடிகிறது. வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்டவற்றை அதிகம் தேடி செல்கின்றனர்.

News May 27, 2024

மருத்துவம் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

image

திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் செய்யப்பட்ட சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் 2024 -2025 ஆம் கல்வியாண்டில் சேர்வதற்கான விண்ணப்பத்தை www.tnmedicalselection.net என்ற இணையதளத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!